Motivation Image 
Motivation

கண்டிப்பாக வாழ்க்கையில் கற்க வேண்டிய கோல்டன் ரூல்!

நான்சி மலர்

“டைட்டானிக்” படம் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த காதல் காவியம் என்றே சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இந்த படம் மட்டுமே 11 ஆஸ்கர்களை வென்றிருக்கிறது.

இவ்வளவு பெருமைகளையும் கொண்ட இந்த படம்தான் ஒரு முக்கியமான வாழ்க்கை பாடத்தையும் நமக்கு கற்றுத் தந்துள்ளது.

டைட்டானிக் படத்தில் உங்களை கவர்ந்தது யார்? இந்த படத்தில் யார் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறீர்கள்.

தன் காதலியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றிய ஜேக்கை காதலித்த ரோஸ் அதிர்ஷ்டசாலியா?

தன்னை திருமணம் செய்ய வந்த பணக்கார மாப்பிள்ளை வேண்டாம் என்று ஜேக்கை கரம் பிடிக்க நினைத்த ரோஸ் கிடைத்ததால் ஜேக் அதிர்ஷ்டசாலியா?

என்னை பொருத்தவரை இவர்கள் இருவருமேயில்லை. இந்த கதையில் மிகவும் அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

ஜேக்கிடம் பந்தயம் வைத்து தன்னுடைய டைட்டானிக் கப்பலில் பயணிக்க வைத்திருந்த டிக்கெட்டை இழந்த அந்த முகம் தெரியாத நபரே இந்த ஒட்டுமொத்த படத்திலும் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் ஆவார்.

அதிர்ஷ்டம் என்றால் என்ன? எல்லாம் நமக்கு ஏற்ற மாதிரி நடப்பதா? எல்லாம் நமக்கு சாதகமாக நடப்பதா?

இல்லை. சில சமயங்களில் தோல்வி கூட அதிர்ஷ்டமே!

தோற்பது ஒன்றும் தவறில்லை. அது சூழ்நிலை, காலம், நேரம், இடம் பொருத்து மாறுபடும். இந்த இடத்தில் எப்படி தோல்வி அந்த முகம் தெரியாத நபருக்கு அதிர்ஷ்டமாக முடிந்ததோ... அப்படி. இல்லையேல் அந்த கப்பலில் பயணித்து உயிர் விட நேர்ந்திருக்கலாம்.

நீங்கள் காதலில் தோற்கிறீர்களா? மனம் தளர வேண்டாம். அதை விட நல்ல காதல் கிடைக்கும் காத்திருங்கள்.

நீங்கள் ஆசைப்பட்ட வேலை இன்னும் கிடைக்க வில்லையா? தொடர்ந்து முயற்சித்து கொண்டேயிருங்கள்.

நீங்கள் இன்னும் உங்களின் வாழ்க்கையின் இலக்கை அடையவில்லையா? எங்கே தவறவிட்டீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

இது எதற்காகவும் கண்டிப்பாக கவலைப்படத் தேவையில்லை. எல்லாம் நடப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். தோல்விதான் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்ற உந்துதலை தரும். வெற்றி நம்மை மந்தமாக்கி விடும். தோல்வியும் நல்லதே! என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இவையாவும் நாம் நம் வாழ்க்கையில் கண்டிப்பாக மறக்கக் கூடாத கோல்டன் ரூல் ஆகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT