Sachin Tendulkar 
Motivation

Sachin quotes: சச்சின் கூறிய 15 தத்துவங்கள்!

பாரதி

கிரிக்கெட் என்றாலே இந்தியர்களுக்கு முதலில் ஞாபகம் வரும் வீரர் சச்சின். கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், 10 வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலுமே, கிரிக்கெட்டில் பெரியளவு சாதனைப் படைத்த ஒரு சாதனையாளராகவே திகழ்கிறார். அந்தவகையில் அவர் கூறிய 15 தத்துவங்கள் பற்றி பார்ப்போம்.

1.  நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை.

2.  அனைத்து சவால்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. சிலசமயம் நீங்கள் பின்வாங்க வேண்டும், எப்பொழுது அது தேவைப்படுகிறதோ அப்போது அதை நோக்கிச் செல்லுங்கள்.

3.  எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார்.

4.   வெற்றி என்பது ஒரு செயல்முறை.

5.  உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள்.

6.  விமர்சனங்களை உங்களின் வெற்றிப் படிகட்டுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

7.  அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்.

8.  துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.

9.  தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய்.

10.  நீங்கள் திட்டமிட்டது போல எப்பொழுதும் காரியங்கள் நடக்காது, அதற்காக சோர்வடையாமல் திட்டங்களுக்குத் தேவையான முயற்சிகளை செய்து கொண்டே இருங்கள், அந்த முயற்சிகள் உங்களைப் பாதுகாக்கும்.

11. வாழ்க்கைத் தொகுப்பு என்பது வெற்றி மற்றும் தோல்வி இரண்டும் கலந்ததாக இருக்கும்.

12. உங்கள் கனவுகளை துரத்துவதை நிறுத்தி விடாதீர்கள், ஏனெனில் உங்கள் கனவுகள் நிச்சயம் பலிக்கக்கூடும்.

13. எனது இலக்கை நான் என்றுமே தீர்மானித்ததில்லை, அதேபோல இலக்கை நோக்கிச் செல்ல வேண்டுமென்று என்னை நான் கட்டாயப்படுத்தி கொண்டதும் இல்லை.

14. நமது பிரச்சனைகளுக்கு காரணமே நமது குழப்பமான மனநிலைதான். உங்களின் குழம்பிய மனது அந்த விஷயம் நடக்கும் முன்பே, இது நடக்குமோ அல்லது அது நடக்குமோ என்று உங்களின் மேல் ஏறி உங்களை பயமுறுத்திக் கொண்டே இருக்கும்.

15. எனது இலக்கு என் மீது அழுத்தத்தை செலுத்த நான் அனுமதிப்பதில்லை.


தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT