The Life-Changing Dopamine Detox Exercise 
Motivation

வாழ்க்கையை மாற்றும்  Dopamine Detox பயிற்சி!

கிரி கணபதி

ற்போது நீங்கள் அதிகமாக அடிமைப்பட்டு கிடக்கும் உங்களுக்கு பயனற்ற செயல்களான டிவி பார்ப்பது, அதிகம் செல்போன் பயன்படுத்துவது, வீடியோ கேம் விளையாடுவது போன்றவற்றை களைவதற்கான ஒரு பயிற்சிதான் Dopamine Detox. 

முதலில் தேவையற்ற, நீங்கள் அதிகம் நேரத்தை செலவிடும் விடயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் திறன்பேசி, தொலைக்காட்சி, தவறான படங்கள் போன்றவற்றிற்கு தான் அனைவருக்கும் அடிமைப்பட்டு கிடப்பார்கள். முதலில் உங்கள் மனதை சுயக்கட்டுப்பாடு செய்து, வாரம் ஒருநாள் இவை மூன்றும் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அன்று ஒரு நாள் உங்களுக்குத் தேவையான, சுய முன்னேற்றம் சார்ந்த புத்தகம் படித்தலயோ, உடற்பயிற்சி செய்தலையோ, அல்லது உங்களுடைய எதிர்கால இலக்குகளுக்கான முயற்சிகளையோ மேற்கொள்ளுங்கள். இதனை அப்படியே இரண்டு மூன்று வாரங்கள் செய்து பழகுங்கள்.

அதன் பின்னர் வாரம் இரு முறை இதுபோன்று இருக்க முயற்சி செய்யுங்கள். அப்படியே தொடர்ந்து வாரம் 3 முறை, வாரம் 4 முறை என்று சிறிது சிறிதாக எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே செல்லுங்கள்.

அந்த தருணங்களை பயன்படுத்திக்கொண்டு உங்களுடைய சுய முன்னேற்றம் சார்ந்த விடயங்களை சரியாக செய்து, அதன் மூலமாக டோபமைன் கிளர்ச்சியை ஏற்படுத்த முற்படுங்கள். எப்படி என்றால், ஒரு நாளைக்கு நமக்கு பயன்படும் விஷயங்களை நாம் செய்யும்போது, அதாவது ஒரு புத்தகத்தில் 30 பக்கங்கள் படிப்பதோ, இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதோ நம் மனநிலையில் ஒரு நேர்மறை எண்ணத்தை ஊக்குவிக்கும். அந்த நேர்மறை எண்ணம் தான் உங்களுடைய டோபமைன் கிளர்ச்சி.

நீங்கள் சிறிது சிறிதாக தேவையற்ற டோபமைன் கிளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய தேவையுள்ள டோபமைன் கிளர்ச்சிக்கு மாற்றம் பெறும் போது, அது உங்களுக்கு ஒரு பழக்கமாக உருவெடுத்து வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

எப்படி தொலைக்காட்சி பார்க்கும் போது, கைபேசி பயன்படுத்தும் போது, தவறான படங்கள் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளீர்களா, அதேபோன்று உங்களுக்கான நல்ல விஷயங்களை நீங்கள் செய்யும்போது அதே மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும்.

நிச்சயம் நீங்கள் எந்த Dopamine detox முறையைப் பயன்படுத்தி, உங்களுடைய சராசரி வாழ்க்கையில், சிறிது மாற்றத்தைக் காணலாம் என உறுதியளிக்கிறேன்.

"நீங்கள் முயற்சிக்காத வரை இங்கு எதுவுமே மாறப்போவதில்லை".

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT