Motivation article Image credit - hellomyyoga.com
Motivation

மாற்ற முடியாததை ஏற்றால் கிடைக்கும் மனநிறைவு!

எஸ்.மாரிமுத்து

மாற்றம் என்பதே மாறாதது. அதனால்தான் நேற்று மகிழ்ச்சியில் மிதந்த ஒருவர், இன்று பயத்தில் தவிக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு வலி. அந்த வலியை மறந்து சிரிக்கிறார்கள். எது மாறும், எதையல்லாம் மாற்ற முடியாது என்பதையும், எதில் மனநிறைவு கிடைக்கும் என்பதை விளக்கும் கதை இது.

மன அமைதி தேடி மலைப்பிரதேசத்தில் இருக்கும் ஓர் ஆசிரமத்திற்கு வந்தார் ஒருவர். அவருக்கு மனதை ஒரு முகப்படுத்தச் செய்யும் பயிற்சி தரப்பட்டது. மூச்சுப் பயிற்சி, தியானம் அனைத்தும் செய்து பழகினார். அமைதியான இடம். தியானத்தில் இருக்கும் மனிதர்கள், உணவு என இச்சூழலால் முன்னைவிட வலிமையாக, அமைதியாக மாறினாலும் ஏதோ ஒன்று குறைந்ததுபோல தெரிந்தது. ஆசிரம குருவிடம் கேட்டார்.

"எது நடந்தாலும், ஆமாம், இது இப்படி நடந்துவிட்டது' என ஏற்றுக்கொண்டால் மன அமைதி கிடைக்கும்.  இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தாமல், இதன் விளைவுகளை எப்படி சரிசெய்யலாம் என யோசித்தால் தீர்வு கிடைக்கும். அதை செய்துவிட்டால் மனநிறைவு கிடைக்கும், என்றார் துறவி.

"இறைவா, என்னால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கொடு. மாற்ற முடிவதைச் செய்வதற்கு ஏற்ற வலிமையைக் கொடு. இரண்டையும் வித்தியாசப்படுத்தி, புரிந்துகொள்ளும் அறிவையும் கொடு" என்பதே அந்தப் பிரார்த்தனை.

கடந்த காலத்தில் நடந்ததை எதையுமே நம்மால் மாற்றமுடியாது. நாம் நினைத்ததுபோல நடக்காத ஒரு விஷயம். எதிர்பார்த்த, கிடைக்காத ஏதோ ஒரு வாய்ப்பு என  எதையுமே திருத்த முடியாது. அவற்றை நினைத்து வருந்துவது வீண் வேலை.

இதேபோல இழந்த காலத்தையும் நம்மால் திரும்பப் பெறமுடியாது. அவற்றை மாற்ற நினைத்தாலும், எதிர்த்தாலும் நம் மன அமைதியும், மகிழ்ச்சியும் சுதந்திரமும் பறிபோய்விடும் என்று துறவி கூறினார்.

அவருக்கு தெளிவாகப் புரிந்து, மன நிறைவும் பெற்றார்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT