The Surprising Powers of Introverts 
Motivation

Introvert-களின் நம்ப முடியாத ஆற்றல்கள்… நீங்க எப்படி? 

கிரி கணபதி

ஆற்றல் மிக்க மனிதர்களைப் பற்றி நாம் பேசும்போது Extrovert-களின் ஞாபகம் நமக்கு நிச்சயம் வரும். அவர்கள் அதிகமாக கஷ்டப்படாமலேயே பிறரது கவனத்தை ஈர்க்கிறார்கள். குறிப்பாக அவர்களது உரையாடல்கள் மூலமாக ஆதிக்கம் செலுத்தி, பலரால் விரும்பப்படுகிறார்கள். இருப்பினும் இவர்களை விட தனித்துவமான குணம் மற்றும் திறன்களைக் கொண்ட Introvert-களும் இருக்கவே செய்கிறார்கள். இந்தப் பதிவில் அவர்களது திறன்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். 

பொதுவாகவே Introvert-கள் தங்களைப் பற்றிய சுய பரிசோதனைகள் மற்றும் ஆழமாக சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். பெரும்பாலான நேரங்களை தனிமையில் கழித்து அமைதியாக இருக்கவே விரும்புகின்றனர். இதன் மூலமாக பிரச்சனைகளுக்கான புதுமையான தீர்வுகள், கிரியேட்டிவிட்டி மற்றும் பல துறைகளில் இவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். 

பிறர் சொல்வதை கவனத்துடன் கேட்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை மட்டுமே மதிக்கும் குணம் கொண்ட இவர்கள், பிறரது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, பிறரை புரிந்துகொள்ளும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் அதிகமாக சிந்திப்பார்கள் என்பதால், எந்த முடிவுகளையும் சிறப்பாக எடுப்பார்கள். ஒரு பிரச்சனையை பல கோணங்களில் கவனமாக பரிசீலித்து, நன்மை தீமைகளை எடை போட்டு முடிவெடுப்பதற்கு முன் பல சாத்தியமான விளைவுகளை பகுப்பாய்வு செய்து முடிவெடுப்பார்கள். இந்த அணுகுமுறை இவர்களை சிறப்பான முடிவுகளை எடுக்க உதவுகிறது. 

Introvert-கள் சுதந்திரமாக இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக எந்த வேலையாக இருந்தாலும் அதை தனியாக செய்வதுதான் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் ஒரு வேலையில் அதிக கவனம் மற்றும் ஆற்றலுடன் இவர்களால் செயல்பட முடியும். 

இவர்களால் மன அழுத்தமான சூழ்நிலைகளில் கூட அமைதியாக எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருக்க முடியும். இந்த குணம் பல பிரச்சினைகளில் இருந்து இவர்களை பாதுகாத்து, சரியான தீர்வுகளைக் கண்டறிய உதவுகிறது. மேலும் பிரச்சினைகளின் காரணங்களை புரிந்துகொண்டு, அதை சரி செய்வதற்கான சரியான தெளிவை இவர்களுக்கு அது ஏற்படுத்துகிறது. 

என்னதான் இத்தகைய சிறப்பான குணாதிசயங்கள் இருந்தாலும் Introvert-கள்‌ Extrovert-களின் அளவுக்கு மக்களால் கவனிக்கப்படுவதில்லை. ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை என்பதால், இவர்களது திறமைகள் வெளியே தெரியாமலேயே போய்விடுகிறது. ஒருவேளை நீங்களும் அத்தகைய  குணம் கொண்டவராக இருந்தால், உங்களது ஆற்றல்களைப் புரிந்து கொண்டு அதை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT