Tricks to speak boldly to others! 
Motivation

பிறரிடம் தைரியமாக பேசும் தந்திரங்கள்! 

கிரி கணபதி

நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பல சவால்களில் பிறரிடம் தைரியமாக பேசுவதும் ஒன்று. புதிய நபர்களை அனுப்புவது முக்கியமான விஷயங்களை பற்றி பேசுவது அல்லது தங்கள் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துவது போன்ற சூழ்நிலைகளில் பலர் தயக்கம் காட்டுகின்றனர். 

இந்த தயக்கம் தன்னம்பிக்கை இல்லாமை, சமூக பயம், விமர்சனம் அல்லது தோல்வி பயம் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். ஆனால், நீங்கள் முயற்சித்தால் தைரியமாக பேசுவதற்கு கற்றுக் கொள்ள முடியும். இந்தப் பதிவில் சொல்லப்போகும் எளிய தந்திரங்களைப் பின்பற்றி தைரியமாக பேச கற்றுக் கொள்ளுங்கள். 

பிறரிடம் தைரியமாக பேசும் தந்திரங்கள்: 

நீங்கள் பேசும் விஷயங்களைப் பற்றி நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசும்போது உங்களது கருத்துக்கள் யோசனைகள் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். 

பேசும்போது தன்னம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் திறமைகளில் நம்பிக்கை வைத்து தைரியமாக பேச முடியும் என்று நம்பினாலே, நல்ல முறையில் பேச முடியும். 

நேராக நின்று, கண்களை நேராகப் பார்த்து, நேர்மறையான உடல் மொழியுடன் பேசவும். பேசும்போது தெளிவாகவும் உறுதியாகவும் பேசுங்கள். உங்கள் குரல் தொனியில் நம்பிக்கை வெளிப்பட வேண்டும். 

பேசும்போது மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனமாகக் கேளுங்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து கேள்விகளை கேட்கவும். நீங்கள் நன்றாக பேசுவதற்கு, நண்பர்கள், குடும்பத்தினர் போன்றவர்களுடன் பேசி பயிற்சி செய்யுங்கள். 

யாரும் முதல் முயற்சியிலேயே சிறப்பாக பேச முடியாது. தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தால், நீங்களும் சிறப்பான பேச்சாளராக மாற முடியும். 

பிறரிடம் தைரியமாக பேசுவது ஒரு முக்கியமான திறன். இது உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும். மேலே குறிப்பிட்டுள்ள எளிய தந்திரங்களைப் பின்பற்றி நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக பேச முடியும். எனவே, இவற்றை முயற்சித்து, உங்களது பேச்சுத்திறன் வாயிலாக சிறப்பான இடத்தை அடைய முயலுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT