Joker 
Motivation

ஜோக்கரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்! 

கிரி கணபதி

ஜோக்கர் என்கிற கதாபாத்திரம் காமிக் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான ஒரு வில்லன் கதாபாத்திரமாகும். குறிப்பாக The Dark Knight திரைப்படம் மூலமாக பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தது அந்த கதாபாத்திரம். என்னதான் அவருடைய செயல்கள் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும், நம்முடைய சுய முன்னேற்றத்திற்கு அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன. இந்தப் பதிவில் அவை என்னவென்று முழுமையாகப் பார்க்கலாம். 

உங்களது தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்: ஜோக்கர் என்றுமே சமூக நெறிமுறைகளுக்கு இணங்கமாட்டார். அவர் எப்போதுமே தனக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படியே நடப்பார். அவர் செய்யும் செயல்கள் தவறானது என்றாலும், அவருக்கு தோன்றுவதை அவர் செய்கிறார் என்கிற நல்ல நடத்தையை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா தருணங்களிலும் சமூகத்திற்கு ஏற்ற மாதிரி நாம் நடந்து கொள்வது நமக்கு பெரிய அளவில் அழுத்தத்தைக் கொடுக்கிறது. எனவே ஜோக்கரைப் போல உங்களுக்கு பிடித்ததை செய்து மகிழ்ச்சியாக இருக்க முற்படுங்கள். 

தோல்வியை ஏற்றுக்கொள்: தி டார்க் நைட் திரைப்படத்தில் அவர் போடும் எல்லா திட்டங்களும் வெற்றி பெறாது. சில திட்டங்களில் அவர் தோல்வியைத் தழுவுவார். இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டு, திட்டத்தை மாற்றியமைத்து புதிய விஷயங்களை செய்யும் வாய்ப்பாக அதை அவர் எடுத்துக்கொள்வார். நமது சொந்த வாழ்க்கையிலும் நாம் எதிர்பார்த்தபடி எல்லா விஷயங்களும் நடப்பதில்லை. எனவே அவற்றை தோல்வியாக நினைக்காமல் புதிய விஷயங்களை முயற்சிப்பதற்கான வாய்ப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். 

தற்போதைய நிலையை மாற்ற முயலுங்கள்: ஜோக்கர் எப்போதுமே அவரது தற்போதைய நிலையை நினைத்து வருந்த மாட்டார். அவரால் என்ன செய்ய முடியும் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருப்பார். ஒன்றுமே இல்லை என்றாலும் அதிலிருந்து ஏதோ ஒன்றை செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அவரிடம் இருக்கும். அதேபோல நீங்களும் உங்களது வாழ்வில் தற்போது எந்த நிலையில் இருந்தாலும், அதை சிறப்பாக மாற்ற முடியும் என்று நம்பிக்கையில் செயல்படுங்கள். 

வாழ்க்கையில் நகைச்சுவை முக்கியம்: ஜோக்கர் கதாபாத்திரம் பார்ப்பதற்கு கோமாளி போல இருந்தாலும், அவரது செயல் அனைத்துமே தந்திரமானதாக இருக்கும். அவர் செய்யும் எல்லா கொடூர செயல்களிலும் நகைச்சுவை கலந்து இருக்கும். இது வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. நீங்கள் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு செயல்பட ஜோக்கர் நமக்கு கற்றுத் தருகிறார். 

எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்: ஜோக்கர் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்டவர். வேகமாக மாறிவரும் உலகில் அதற்கு ஏற்றவாறு திறன்களை வளர்த்துக் கொண்டு, நமது தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே உங்களது தற்போதைய நிலையை நினைத்து வருந்தாமல், எல்லா சூழ்நிலையையும் ஏற்றுக்கொண்டு, உங்களை சிறப்பாக மாற்றும் முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 

இப்படி பல நல்ல விஷயங்களை ஜோக்கர் கதாபாத்திரத்திடமிருந்து நாம் கற்றுக்கொண்டு, வாழ்க்கையில் சிறப்பான இடத்தை அடைய முடியும். ஜோக்கர் கதாபாத்திரம் கெட்டதாக இருந்தாலும், அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு நாம் நமக்கான வெற்றியை நோக்கி பயணிப்போம். 

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT