Walt Disney 
Motivation

Walt Disney Quotes: வால்ட் டிஸ்னியின் 15 சிந்தனை வரிகள்!

பாரதி

அனிமேஷன் உலகில் பல சாதனைகளைப் படைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையுமே ஈர்த்த ஒருவர் வால்ட் டிஸ்னி. இவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்கள் இன்றும் உலக மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கின்றன என்றே கூற வேண்டும். அதுவும் மிக்கி மவுஸ் என்றால் யாருக்குதான் தெரியாது?

அந்தவகையில் வால்ட் டிஸ்னி கூறிய 15 சிந்தனை வரிகளைப் பற்றி பார்ப்போம்.

1.  ஒரு செயலை ஆரம்பிப்பதற்கான வழி, பேச்சை நிறுத்திவிட்டு செயல்பாட்டை தொடங்குவதே ஆகும்.

2.  துன்பத்தில் பூக்கும் பூவே அனைத்திலும் அரிதான மற்றும் அழகான பூவாகும்.

3.  தொழிலுக்காக ஒருபோதும் ஒருவர் அவரது குடும்பத்தைப் புறக்கணிக்கக் கூடாது.

4.  உங்களால் ஒன்றை கனவு காண முடியுமானால், உங்களால் அதை செய்யவும்  முடியும்.

5.  கனவைப் பின்தொடர்வதற்கான தைரியம் இருந்தால், கனவுகள் அனைத்தும் நனவாகும்.

6.  விடாமுயற்சியுடனும் தைரியத்துடனும் கனவுகளைத் துரத்திக்கொண்டு ஓட முடிவெடுத்தவரின் ஒவ்வொரு கனவும் நினைவாகும்.

7.  எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ, அந்த இடத்தை விட்டு விலகிச்சென்று, புதியவற்றைத் தேட தொடங்குகள். அதுவே உங்களை வெற்றியாளராக உருவாக்கும்.

8.  உன்னை அறிந்துக்கொள்ளாமல் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, நாளை இறப்பதே மேல்.

9. வாழ்க்கையின் மிகப் பெரிய தருணங்கள் என்பது சுயநல சாதனைகள் அல்ல, மாறாக நாம் நேசிக்கும் மற்றும் மதிக்கும் நபர்களுக்காக நாம் செய்யும் காரியங்களாகும்.

10.  நீங்கள் ஆர்வமாக இருக்கும்போது, ​​​​ சுவாரஸ்யமான விஷயங்களைக் காணலாம்.

11. "நான் என் வாழ்நாள் முழுவதும் கடுமையான போட்டிகளை எதிர்கொண்டேன். அவை இல்லாமல் எப்படி பழகுவது என்று எனக்குத் தெரியவில்லை."

12. "என் வாழ்க்கையில் நான் சந்தித்த அனைத்துத் துன்பங்களும், எனது ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் என அனைத்தும் என்னை பலப்படுத்தியுள்ளன."

13.  நாங்கள் முன்னோக்கி நகர்கிறோம், புதிய கதவுகளைத் திறக்கிறோம், புதிய விஷயங்களை செய்கிறோம், ஏனென்றால் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆர்வம் நம்மை புதிய பாதைகளில் வழிநடத்துகிறது.

14. நீங்கள் உங்களை எவ்வளவு அதிகமாக விரும்புகிறீர்களோ? அவ்வளவு குறைவாக நீங்கள் மற்றவர்களைப் போல இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது உங்களை தனித்துவமாக்குகிறது.

15. ஒவ்வொரு குழந்தையும் ஒரு தெளிவான கற்பனையுடன் பிறக்கிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT