What would happen if humans stopped thinking? 
Motivation

மனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? 

கிரி கணபதி

மனிதர்களை தனித்துவமாக்குவது அவர்களின் சிந்திக்கும் திறன்தான். காரணங்களை ஆராய்ந்து, சிக்கல்களை தீர்த்து, புதிய கருத்துக்களை உருவாக்கும் திறன் நம்மை பூமியில் ஆதிக்க இனமாக மாற்றியுள்ளது. ஆனால், ஒருவேளை மனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும், என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இந்தப் பதிவில் இக்கேள்வியை முழுமையாக ஆராய்ந்து, மனித நாகரிகம் இதனால் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைத் தெரிந்து கொள்வோம். 

மனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திவிட்டால் அவர்களின் உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதிக்கப்படும்.‌ நமது மூளை, நமது உடலைக் கட்டுப்படுத்தவும், நமது உறுப்புகளை செயல்பட வைக்கவும், நமது புலன்களில் இருந்து தகவல்களை சேகரித்து அதை செயலாக்கத் தேவையான சிக்னல்களை அனுப்புகிறது. நாம் சிந்திக்காமல் இருந்தால் இந்த அனைத்து செயல்பாடுகளும் முற்றிலுமாக நின்றுபோய் மனிதர்கள் இறக்கும் நிலை ஏற்படலாம். 

மனநல ரீதியாக, நாம் சிந்திக்காமல் இருந்தால் நமக்கு எவ்விதமான உணர்வுகளும் இருக்காது. நினைவுகளை உருவாக்க முடியாது. அல்லது வாழ்க்கையில் இலக்குகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அடைய திட்டங்களை உருவாக்க முடியாது. வெறும் உயிர் மட்டுமே நம் உடலில் எஞ்சி இருக்கும். மெமரி முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஜடம் போல நாம் மாறிவிடுவோம்.‌ 

இதனால், நமது சமூகம் மற்றும் நாகரீகம் முற்றிலுமாக சிதைந்து போகும். தகவல் தொடர்பு இருக்காது. எந்த சிக்கல்களையும் தீர்க்க முடியாது. வாழ்க்கையின் மிக முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது, நமது பொருளாதாரம் முடங்கிவிடும், அரசாங்கங்கள் செயல்படாது, மனிதர்களுக்குள் சண்டைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

உலகம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். சிந்திப்பதை அடிப்படையாகக் கொண்ட கலை, இசை, இலக்கியம் போன்ற எவ்விதமான படைப்பு சார்ந்த விஷயங்களும் வெளிவராது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற எதுவுமே முன்னேறாது. மனிதர்கள் விலங்குகளைப் போல வெறுமனே கிடந்து எதிர்காலத்தைப் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாமல் அப்படியே வாழ்வார்கள். 

மிருகத்தை விட மோசமான நிலைக்கு மனித சமூகம் செல்லும். இது நிச்சயம் ஒரு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலமாக, நாம் சிந்தித்தால் மட்டுமே நம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, சிந்தனையின் ஆற்றலைப் புரிந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் சிந்தனையில் மூழ்கி வெற்றியாளராக மாறுங்கள். 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT