Tina Turner... 
Motivation

நிஜமான நீங்கள் வெளிப்படுவது எப்போது தெரியுமா?

சேலம் சுபா

"Sometimes you have to let everything go - purge yourself. If you are unhappy with anything - whatever is bringing you down - get rid of it. Because you will find that when you are free, your true creativity, your true self comes out.

சில சமயங்களில் நீங்கள் எல்லாவற்றையும் போகவிடுங்கள்- களையெடுத்துவிடுங்கள். எதிலாவது நீங்கள் மகிழ்ச்சியற்று இருந்தால், எது உங்களைக் கீழ் நோக்கி இழுக்கின்றதோ, அதை விட்டொழியுங்கள். ஏனெனில் நீங்கள் ஓய்வாய் இருக்கும்போது உங்களின் நிஜமான படைப்பாற்றல், உங்களின் நிஜமான நீங்கள் வெளிப்படுவதைக் காணலாம்.” - Tina Turner.

"ராணி ஆஃப் ராக் அன் ரோல்" என்று அறியப்பட்ட  டினா டர்னர்  ஒரு அமெரிக்க   பாடகி, பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார். நீண்ட காலம் கலைத்துறையில் பங்களித்த தன்னம்பிக்கையாளரான இவர் சொன்ன கூற்றே மேலுள்ளது.

அந்த இளைஞன் காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சி யுடன் நேர்முகத் தேர்வு ஒன்றிற்கு செல்ல ஆயத்தம் ஆகி கொண்டிருந்தா. வீட்டில் அவன் பெற்றோர் ஏதோ ஒரு விஷயத்துக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூடியிருந்த கதவை மீறி அவர்கள் சத்தம் அவன் காதுகளில் விழுந்தது. அவனின் கவனம் கலைந்தது.

அவன் மனம் தன் பெற்றோர் பற்றிய எண்ணமே ஓடியது. 'என்ன இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு. எப்படித்தான் நான் படிப்பது?" என்று எண்ணியவன் ஒரு முடிவுடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் வெளியே வந்ததும் அவன் பெற்றோர் சற்றே அமைதியாகி அவன் தாய் "டிபன் எடுத்து வைக்கிறேன் வந்து சாப்பிட்டு போப்பா" என்கிறார்.

அந்த இளைஞன் "எனக்கு டிபன் வேண்டாம் நான் போகும் வழியில் சாப்பிட்டுக் கொள்கிறேன். இங்கு இருந்தால் என்னுடைய உற்சாகம் குறைந்துவிடும். நீங்கள் இருவரும் அமைதியாக இருக்க மாட்டீர்கள். எனக்கு இது முக்கியமான நேர்முகத்தேர்வு உங்களிடம் இருந்து விலகி இருப்பதையே நான் விரும்புகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அவன் பெற்றோர் தலை கவிழ்ந்தது.

சென்றவன் அருகில் இருந்த பூங்காவில் அமைதியாக அமர்ந்து தன்னுடைய முழு கவனத்தையும் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியில் வைத்தான். அவன் வெற்றி பெற்றானா இல்லையா என்பது இங்கு முக்கியமல்ல. ஆனால் அவன் வெற்றி பெறுவதற்கான தகுதியை அடைந்துவிட்டான். அவன் இடத்தில் வேறு ஒரு இளைஞர் இருந்திருந்தால் தாய் தந்தையின் வாக்குவாதத்தை பார்த்து மனம் உடைந்து என்னை இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று அதே எண்ணத்துடன் தேர்வுக்கு சென்று சொதப்புவார்கள்.

ஆனால் இவனோ பெற்றோராகவே இருந்தாலும் தனது மகிழ்ச்சியைக் குறைத்து தன் வெற்றிக்குப் பின்னடைவு தரும் செயலில் இறங்கிய அவர்களைத் தள்ளி வைக்கும் தெளிவான உறுதியைப் பெற்றிருந்தானே.

நம் மகிழ்ச்சியை பறிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விலக்கி வைக்க கூடிய உறுதி இருந்தால் நம்முடைய வெற்றியும் உறுதியாகும். நெற் பயிரின் ஊடே விளையும் களைகளை எடுப்பது என்பது அந்த பயிர் சேதமின்றி செழித்து வளர்ந்து நல்ல பலன் தரும் என்பதற்காகதான்.

அதேபோல்தான் நம் வாழ்க்கையிலும் நம்மை பின்னுக்கு தள்ளும் களைகளை அதாவது நம் உற்சாகத்தை குறைக்கும் நபர்களையோ அல்லது வேறு செயல் களையோ நாம் புறந்தள்ளி முன்னோக்கி செல்லப் பழகவேண்டும். உணர்வு பூர்வமாக சிந்திக்காமல் அறிவு பூர்வமாக சிந்தித்து விலகி தனித்தியங்கும்போது நமக்கே தெரியாத நிஜமான நம்மை வெளிப்படுத்தி நம்முடைய திறமைகளை செம்மையாக்கி வேகமான வெற்றி தருகிறது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT