Motivation image pixabay.com
Motivation

ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது!

ஆர்.ஜெயலட்சுமி

ருண்ட தினத்தை மறுநாள் வரை வாழ்ந்து விட்டால் அந்த நாள் தானாகவே கழிந்து போகும் என்று வில்லியம் கூப்பர் பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார். அது அன்றும் உண்மை, இன்றும் உண்மை, என்றும் உண்மை.

நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட நாட்கள் உண்டு. ஒவ்வொரு இருண்ட நாளும் கழியத்தான் போகிறது. அழுத்தமான சோகங்களை நம் மீது திணிக்கின்ற வாழ்க்கை மென்மையான அன்பினால் அந்த சோகத்தையும் துடைக்கவே செய்கிறது. இரண்டு நாள் கழித்து புதிய நாள் உதயமாகிறது. நம்முடைய இருண்ட நாட்கள் கடந்துபோய் அதன் சோகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறதிக்குள் புதையட்டும்.

ஒவ்வொரு நாளும் கடந்த கால இருளை புதுப்பித்துக் கொண்டே இருக்காதீர்கள். இறந்து போன கடந்த காலம் இறந்ததாகவே புதைக்கட்டும். உலகத்திலே எதுவுமே எப்போதும் நீடிப்பதில்லை தொல்லைகள் கூட நாமாக புதுப்பிக்காவிட்டால் சிறிது காலமே இருந்து மறைந்து விடுகிறது.

எதிர்காலத்தின் கதவுகள் உங்களுக்காக திறந்து இருக்கின்றன. ஏற்கனவே மூடிவிட்ட கடந்த கால கதவைப் பார்த்தபடியே தயங்கி கொண்டு இருக்காதீர்கள்.

ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது என்பது வாழ்க்கையில் நியதி. மூடிவிட்ட கதவை சோகத்தோடு பார்த்தபடி காலத்தை கழிக்கிறோமே தவிர, திறந்த கதவை நாடுகின்ற நல்ல காரியத்தை நாம் செய்வதில்லை. ஒவ்வொரு நாள் பாரமும் அன்றைக்கு போதுமானதாக இருக்கட்டும். ஒரு நாள் பாரத்தை மட்டும் சுமப்பதற்கு உங்களிடம் போதுமான பலம் இருக்கிறது

இன்றைய இருண்ட நேரம் கழிந்துவிட்ட பிறகு நாளை எப்படி இருக்கும்? ஒன்றைப் பற்றி நீங்கள் நிச்சயமாக இருக்கலாம். நாளை வித்தியாசமானதாக இருக்கும் ஏனெனில் வாழ்க்கை  மாறிக்கொண்டே இருப்பது நாளைக்கு நடக்க இருக்கும் மாற்றங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் நடக்க இருக்கும் மாற்றங்களின் மீது உங்கள் செல்வாக்கை நீங்கள் பயன்படுத்த முடியும்.

மனோபாவம் நடவடிக்கை ஆகிய விஷயங்களை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்வு செய்ய முடியும். இருண்ட தினத்தின் கதவு மூடப்படும் போது புதிதாக திறந்த கதவை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்கலாம். அதன் வழியாக நடந்து செல்லலாம். நம்பிக்கையுடன் ஒளி பொருந்திய மறுநாளை நோக்கி ஒவ்வொருவரும் இந்த தன்னம்பிக்கையுடன் அன்றைய நாட்களில் எதிர் கொண்டால் வாழ்க்கையில் என்றுமே மகிழ்ச்சி மட்டுமே தங்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT