A simple remedy to remove sins https://www.youtube.com
ஆன்மிகம்

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தீர ஓர் எளிய பரிகாரம்!

எஸ்.மாரிமுத்து

ம் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ பல பாவங்களைச் செய்திருப்போம். அந்தப் பாவங்களுக்கான தண்டனைகளையும் அனுபவித்து கொண்டு இருப்போம். அந்த வருத்தங்களைத் தாங்க முடியாமல் சில நேரங்களில், ‘என்ன பாவம் செய்தோமோ, ஏன் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது’ என்று வருந்தக் கூடச் செய்திருப்போம்.

நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர நமது முன்னோர்களால் சொல்லப்பட்ட ஓர் எளிய பரிகாரம்தான் வீட்டு வாசலில் போடப்படும் பச்சரிசி மாவுக் கோலம். இப்படி காலையில் வீட்டு வாசலில் போடப்படும் பச்சரிசி மாவுக் கோலத்தினால் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து புண்ணியப் பலன்கள் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம். வீட்டு வாசலில் போடப்படும் பச்சரிசி மாவுக் கோலத்தை சாப்பிட வரும் எறும்புகள் மூலம் நமது பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை.

சனிக்கிழமை அதிகாலையில் குளித்து முடித்து ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி மாவை எடுத்துக்கொண்டு சூரிய உதயத்தில்  சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று விநாயகரை சுற்றி நாம் கொண்டு சென்ற பச்சரிசி மாவினால் கோலமிட வேண்டும். இந்த பச்சரிசி மாவுக் கோலத்தை உண்ண வரும் எறும்புகள் மூலம் நாம் செய்த ஏழு ஜன்ம பாவமும் தீரும் என காஞ்சி மகாபெரியவரும் பல முறை அறிவுறுத்தியுள்ளார்.

எறும்புகளின் எச்சில் பட்ட எந்த ஒரு உணவும் இரண்டேகால் வருடம் வரை கெடாது. இந்த இரண்டேகால் வருடம் தானமாகக் கொடுத்த பச்சரிசி எறும்புகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. இதனை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டே இருப்பார்களாம்.

இரண்டரை வருட கால கிரக நிலை தோஷங்கள், எறும்புகளுக்கு உணவிடுவதன் மூலம் நம் பாவங்கள் நீங்கும். எனவே, நாம் அறியாமல் செய்த பாவங்களுக்காக அனுபவிக்கும் தண்டனையில் இருந்தும் விடுபடலாம்.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT