சிவபெருமான் 
ஆன்மிகம்

மகாசிவராத்திரி அன்று வீட்டில் இந்தச் செடிகளை வாங்கி வைய்யுங்கள்!

பாரதி

காக்கும் மற்றும் அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு விரதம் இருந்து அவரை வழிப்படும் சிறப்பான நாள்தான் சிவராத்திரி. இந்துக்கள் இரவு முழுவதும் விரதம் இருந்து தூங்காமல் சிவனை வழிப்பாடுவார்கள். இதனால் சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பார்வதி தவம் இருந்து மகா சிவராத்திரி நாளன்று சிவனைத் திருமணம் செய்துக்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அன்று இரவுதான் சிவன் லிங்கமாக மாறினார் என்றும் கூறுகின்றனர். கதைகள் ஆயிரம் இருந்தாலும் சிவனின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கான நாளாகத்தான் சிவராத்திரி கருதப்படுகிறது. அந்தவகையில் சிவராத்திரி நாளன்று சில செடிகளை உங்கள் வீட்டிலோ தோட்டத்திலோ வைத்தால் சிவனின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. அந்தவகையில் எந்தெந்தச் செடிகளை வைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

மல்லிகை செடி:

பொதுவாகவே இந்த மல்லிகைச் செடி பார்வதி தேவிக்கு மிகவும் பிடித்த செடியாகக் கருதப்படுகிறது. ஆகையால் இந்தச் செடியை மகா சிவராத்திரி அன்று வாங்கி வந்து உங்கள் வீட்டில் வைத்து நன்றாகப் பராமரித்து வளர்க்க வேண்டும். இதனால் அந்த வீட்டில் வாழும் தம்பதிகளிடையே ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அவை நீங்கும். இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கரு ஊமத்தை செடி:

முட்கள் நிறைந்த செடியை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சிலர் கூறினாலும், மகாசிவராத்திரி அன்று அந்தச் செடியை வீட்டில் வளர்க்கலாம். ஜோதிடர்களின் கூற்றுப்படி அந்த நாளில் கரு ஊமத்தை செடியை வைத்து வளர்ப்பது மங்களகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பதால் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். அதேபோல் இது வீட்டில் ஏற்படப்போகும் பேரழிவுகளைத் தடுக்கும். மேலும் சிவனின் முழு ஆசிர்வாதமும் கிடைக்கும்.

வில்வ மரம்:

சிவனுக்கு உகந்த ஒரு இலை என்றால் அது வில்வ இலைகள் என்பது பொதுவாக அனைவருக்குமே தெரியும். ஏனெனில் சிவனின் மனதில் வில்வ மரம், வில்வ இலை மற்றும் அம்மரத்தின் பழங்கள் ஆகியவைத் தனி இடத்தைப் பிடித்திருக்கின்றன என்று முன்னோர்கள் கூறுவார்கள். சிவனைத் தரிசிக்க செல்லும்போதே சிலர் வில்வ இலைகளையும்  எடுத்துக்கொண்டுத்தான் செல்வார்கள். இதனை வீட்டில் வளர்த்து வந்தால் அங்குள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி சிவனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  

இந்த 7 அறிகுறிகள் இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க பாஸ்! 

வெற்றி என்ற இலக்கை அடைய உதவும் 8 சக்சஸ் பாயிண்ட்டுகள்!

Ind Vs SA: விதிமுறையை மீறிய தென்னாப்பிரிக்கா வீரருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

இத தெரிஞ்சுக்காம சீம்பால் யாரும் சாப்பிடாதீங்க! 

சபரிமலை ஐயப்பன் கோயில் படி பூஜையின் சிறப்புகள்!

SCROLL FOR NEXT