Do you know the vehicles and history of Lord Muruga?
Do you know the vehicles and history of Lord Muruga? 
ஆன்மிகம்

முருகப்பெருமானின் வாகனங்களும் வரலாறும் தெரியுமா?

அமுதா அசோக்ராஜா

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டு இருப்பான். அப்படி குமரன் இருக்கும் இடங்களில் அவனது வாகனமும் இருக்கும். குமரனுக்கு மயில் மட்டும்தான் வாகனமா? என்று கேட்டால் இல்லை என்கிறது புராணம்.

ஒரு சமயம் நாரத முனிவர் வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்வியின்போது முனிவர்கள் சில மந்திரங்களைத் தவறாக உச்சரித்தனர். அதன் விளைவாக வேள்வித் தீயிலிருந்து சிவப்பு நிற ஆட்டுக்கிடா ஒன்று வெளிப்பட்டு முரட்டுத்தனமாக எல்லோரையும் தாக்கியதோடு விண்ணுலகிலும், மண்ணுலகிலும் வெறியோடு பாய்ந்து அழிவை ஏற்படுத்தியது. அதைக்கண்டு பயந்த முனிவர்களும் மற்றவர்களும் ஆறுமுகப் பெருமானிடம் முறையிட்டு அந்த ஆட்டுக்கிடாவை வதைத்து அருளிபுரிய வேண்டினர்.

முருகனும் அந்த ஆட்டுக்கிடாவை வதம் செய்ததோடு, அதை தனது வாகனமாகக் கொண்டு அருளினார். அன்றுமுதல் முருகன், ‘மேஷவாகனர்’ என்றும் போற்றப்பட்டார். முருகன் திருப்பரகுன்றத்தில் ஆடு வாகனத்தோடு காட்சி தருகிறார்.

ஹரிகேசன் என்ற கொடிய அரக்கனிடம் போரிட்டு வலிமையிழந்த இந்திரன், சுவாமிமலை சென்று முருகனை வேண்டித் தவமிருந்து இழந்த பலத்தைத் திரும்பப் பெற்றான். அதற்கு இந்திரன் நன்றிக்கடனாக வெள்ளை ஐராவதம் என்ற தனது யானையை முருகனுக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தான்.

சூரனை போரிட்டு வென்ற பின் அவனை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை சேவல் கொடியாகவும் மற்றொரு பகுதியை மயில் வாகனமாகவும் கொண்டதை நாம் நன்கு அறிவோம்.

கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தக்கலை அருகிலுள்ள குமாரக் கோயிலில் உத்ஸவ காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில் பவனி வருவார். கோவை, மருதமலையில் உள்ள மண்டபத்தில் முருகன் குதிரை மீது வந்த சிற்பத்தைக் காணலாம்.

திருத்தணியில் உள்ள யானை வாகனம் சுவாமியை பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுவிழாவா! குடும்ப விழாவா! மகிழ்ச்சியில் மிதந்த மக்கள்!

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

SCROLL FOR NEXT