Kunguliyam Benefits Image Credits: Lazada.com
ஆன்மிகம்

குங்குலியத்தின் சூப்பர் பலன்களைத் தெரிஞ்சுக்கலாமா?

நான்சி மலர்

அனைத்து மதத்தவருக்கும் பொதுவாகவே சாம்பிராணி போடும் வழக்கம் உண்டு. சாம்பிராணி போடுவதன் நோக்கம் வீட்டில் நல்ல நறுமணம் வருவதற்கும், விஷ ஜந்துக்கள் வீட்டில் வராமல் இருக்கவும், வீட்டினுள் நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதற்காகவுமே ஆகும்.

குங்குலியம் என்பது அகாதிசீஸ் என்னும் மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினாகும். இந்த பிசின் ஈரமாக இருக்கும்போது மர சாமான்களை ஒட்டுவதற்கு பயன்படுகிறது. இதுவே இது நன்றாகக் காய்ந்த பிறகு சாம்பிராணியாக பயன்படுகிறது. குங்குலியத்தை நன்றாக பொடி செய்து சாம்பிராணியுடன் கலந்து வைத்து கொண்டு, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் தூபம் போடும்போது வீடே மணக்கும்.

இந்த குங்குலிய சாம்பிராணியை வீட்டிலே போடுவதால் விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வராது. முக்கியமாக ஈ, கொசுக்கள் வராது. நல்ல நறுமணத்துடன் இருப்பதனால் இதை தெய்வ வழிபாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள். குங்குலியத்தை ஒரு பவுலில் போட்டு வீட்டினுள் வைத்து விட்டால் விஷ ஜந்துகள், தீய சக்திகள், துர்தேவதைகள் வீட்டினுள் வராது.

நாட்டு மருந்துக்கடையில் குங்குலியம் என்று கேட்டால் கிடைக்கும். பழங்காலத்தில் அரசர்களும், வியாபாரிகளும் இதை பயன்படுத்தினர். குங்குலியத்தை நெருப்பில் போட்டு புகைக்க, வீட்டில் உள்ள விஷக்காற்று சுத்தமாகும். குங்குலியத்திலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் எல்லாவிதமான சருமப் பிரச்னையையும் போக்கும்.

குங்குலியத்தை ஞாயிற்றுகிழமை புகை போட்டால், ஆத்ம பலம், செல்வாக்கு, ஈஸ்வரன் அருள் கிடைக்கும். திங்கட்கிழமையில் தூபம் போட்டால் தேக அமைதியும், அம்பாள் அருளையும் பெறலாம். செவ்வாய்கிழமை தூபம் போட்டால், எதிரிகளின் போட்டி, பொறாமை நீங்கும், எதிர்மறை எண்ணங்களினால் உண்டான கண் திருஷ்டி கழியும், கடன் நிவர்த்தியாகும், எதிரிகளின் தொல்லை நீங்கும்.

புதன்கிழமை தூபம் போடுவதால் நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள், நல்ல சிந்தனை வளரும், வியாபாரத்தில் வெற்றி கிட்டும். வியாழக்கிழமையில் தூபம் போட்டு அனைத்துவிதமான சுபமான விஷயங்களும் நடக்கும், மகான்களின் ஆசி கிடைக்கும். வெள்ளிக்கிழமை தூபம் போட்டால், லட்சுமி கடாட்சம் இல்லத்தில் நிலைக்கும், செய்யும் காரியம் அனைத்தும் வெற்றி பெறும். சனிக்கிழமையில் தூபம் போட்டால், சோம்பல், துன்பம் நீங்கும். சனீஸ்வரர் மற்றும் பைரவரின் அருளைப் பெறலாம்.

குங்குலியம் சித்த மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. குங்குலிய வெண்ணெய் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது. இருமல், ஆஸ்துமா, அல்சர், வயிற்றுப்புண் ஆகியவற்றை சரிசெய்கிறது. சர்க்கரை வியாதியால் ஏற்படும் ஆறாத புண்களைக் கூட ஆற வைக்கும் குணம் குங்குலியத்திற்கு உண்டு. சருமத்தில் ஏற்பட்ட தீக்காயத்தை கூட குணமாக்கும் ஆற்றல் பெற்றது இது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குங்குலியத்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT