Sri Krishnar with Bama 
ஆன்மிகம்

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

இந்திராணி தங்கவேல்

ரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்க நாரதர் வந்தார். அப்போது அவர் தேவலோகத்தில் உள்ள புஷ்பமான பாரிஜாத மலரைக் கொண்டு வந்து பகவானுக்கு அர்ப்பணித்தார். அந்த மலரை உடன் இருந்த தனது தேவி ருக்மிணிக்குக் கொடுத்தார் பகவான். அது தெரிந்ததும் சத்தியபாமாவுக்கு மனச் சஞ்சலம் ஏற்பட்டது. அந்த தேவலோக மலரைத் தனக்குத் தராமல் ருக்மிணிக்கு மட்டும் கொடுத்ததை பரந்தாமனிடம் தெரிவித்து மனம் வருந்தினாள்.

“பாரிஜாத மலருக்காகவா வருந்துகிறாய்? அந்த மரத்தையே தேவலோகத்தில் இருந்து வரவழைத்து உனக்குத் தருகிறேன். வருத்தம் வேண்டாம்” என்று வாக்குக் கொடுத்தார். அதையடுத்து அவளை அழைத்துக்கொண்டு தேவலோகம் சென்றார் பகவான். அங்கே உள்ள பாரிஜாத மரத்தை பிடுங்கி கருடன் மீது ஏற்றி துவாரகைக்கு அனுப்பினார். அதை அப்போது இந்திரன் தனது சேனையுடன் வந்து எதிர்த்தான். அவர்களை பகவான் வென்று பாரிஜாத மரத்தை எடுத்து வந்தார்.

சத்திய பாமாவின் மாளிகையில் உத்தியான வனத்தை அழகு செய்ய பாரிஜாத மரம் நிறுவப்பட்டது. இதனால் ருக்மிணி மனம் வருத்தமடைய, மரம் பாமா வீட்டிலும், அதன் மலர்கள் ருக்மிணி மாளிகையிலும் இருக்கும்படி பகவான் அருளினார்.

இதைப் பார்த்து கோபித்து அழுத பாமாவுக்கு பகவான் சொன்னார், "சத்திய பாமா! நீ மலரை உனது ஆசைக்கும் அனுபவத்திற்கும் வேண்டினாய். ருக்மிணி அந்த பாரிஜாத மலரை எனக்கே அர்ப்பணித்தாள். ஆகவே, மரம் உன்னிடமும்  மலர் அவளிடமும் இருக்கும்படி செய்தேன்" என்றார்.

தனது தவறை உணர்ந்து மன்னித்தருள பாமா பகவானிடம் பிரார்த்தித்தாள். அதன் பின்பு மலர்கள் சமமாக இருவருக்கும் கிடைக்கும்படி பகவான் அருள் செய்தார். இது ஹரி வம்சம் கூறும் வரலாறு.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT