Picasa
ஆன்மிகம்

சாபத்தால் கல்லாக மாறும் மனிதர்கள்; இந்தக் கோயிலின் இரகசியம்தான் என்ன?

பொ.பாலாஜிகணேஷ்

ந்தியாவில் மனித கருத்துக்கு எட்டாத பல வினோத கோயில்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ராஜஸ்தானில் உள்ள கிராடு கோயில். அதிகமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இப்பகுதியில் சிவனுக்கென்று இங்கு ஐந்து கோயில்கள் உள்ளன.

இது மக்களை ஈர்க்கும் கோயிலாக மட்டுமல்லாமல், பயம் காட்டக்கூடிய ஒரு கோயிலாகவும் விளங்குகின்றது. இந்தியாவின் சபிக்கப்பட்ட கோயில் என்றே இந்தக் கோயில் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோயில் குறித்து இப்பதிவில் காண்போம்.

ராஜஸ்தான் மாநிலம், பர்மர் பகுதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில் பாலைவனப் பகுதியில் கிராடு கோயில் அமைந்துள்ளது. சிற்பங்கள் நிறைந்த சிறிய கட்டடங்களாக இக்கோயில் காணப்படுகிறது. இது தற்போது புதிய சுற்றுலா தலமாக மாறி உள்ளது. கிராடு என்பதன் உண்மையான பெயர் கிராவுகாட் ஆகும். 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோமேஸ்வர் என்ற மன்னர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர்.

அழகு மற்றும் செல்வ வளத்தால் இப்பகுதி அடிக்கடி அந்நியப் படையெடுப்புக்களால் பாதிக்கப்பட்டதால் மன்னர் சோமேஸ்வர், துறவி ஒருவரை அழைத்து வந்து இங்கு சிறப்பு பூஜைகளைச் செய்து நாட்டின் செழிப்பை மேம்படுத்தினர். அந்தத் துறவி திரும்பிச் செல்லும்போது, அந்த நாட்டின் வளத்தை பாதுகாக்கும் பொறுப்பை தனது சீடரிடம் ஒப்படைத்துள்ளார். பிறகு அந்த நாட்டின் வளம் செழித்தோங்கியது. ஆனால், அந்நாட்டு மக்கள் அந்த சீடனை மறந்துவிட்டார்கள்.

காலவோட்டத்தில் அந்த சீடன் நோயினால் பாதிக்கப்பட்டான். அவனை யாரும் கவனித்துக்கொள்ளவில்லை. ஒரு குயவனின் மனைவி மாத்திரமே அந்த சீடனை கவனித்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் மீண்டும் திரும்பி வந்த துறவி, நாட்டு மக்கள் அனைவரும் தனது சீடனை கண்டுகொள்ளாமல் விட்டதை அறிந்து, ‘இந்த ஒட்டுமொத்த ராஜ்யமும் மனிதர்களே இல்லாத இடமாகப் போகட்டும்’ என சாபம் கொடுத்தார். குயவனின் மனைவியைத் தவிர, மொத்த ராஜ்யமும் கல்லாக மாறும்படி அவர் சாபம் அளித்தார். துறவியின் சாபத்தின்படி அந்நாட்டில் உள்ள அனைவரும் கல்லாக மாறிப் போயினர் என்பது இப்பகுதியில் நிலவும் நம்பிக்கை.

ஆகவே, இக்கோயிலில் இரவு நேரத்தில் யாரும் தங்கக் கூடாது என்ற விதி தற்போது உள்ளது. இந்த விதியை மீறி யாராவது தங்கினால் மனிதர்களாக இருப்பவர்கள் கல்லாக மாறி விடுவார்கள் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT