முருகப்பெருமானுக்கு காவடிகள் 
ஆன்மிகம்

முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடிகளும் பலன்களும்!

ஆர்.ஜெயலட்சுமி

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த திருநாளாகத் திகழ்கிறது ஆடிக் கிருத்திகை விரதம். இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு பூஜைகளும் பரிகாரங்களும் நடைபெறுகின்றன. அவற்றில் ஒன்றுதான் முருகப்பெருமானை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனாக பக்தர்கள் சுமக்கும் காவடிகளும். அப்படி பக்தர்கள் எடுக்கும் காவடிகளின் வகைகளும் அவற்றினால் ஏற்படும் பலன்களும் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

காவடிகளில் மொத்தம் 20 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு வகை பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக்கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது.

* தங்கக் காவடி எடுத்தால் நீடித்த புகழ் கிடைக்கும்.

* வெள்ளிக் காவடி எடுத்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

* பால் காவடி எடுத்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.

* சந்தனக் காவடி எடுத்தால் வியாதிகள் நீங்கும்.

* பன்னீர் காவடி எடுத்தால் மனநல குறைபாடுகள் விலகும்.

* சர்க்கரை காவடி எடுத்தால் சந்தான பாக்கியம் கிட்டும்.

* அன்னக் காவடி எடுத்தால் வறுமை நீங்கும்.

* இளநீர் காவடி எடுத்தால் சரும நோய் நீங்கும்.

* அலங்கார காவடி எடுத்தால் திருமணத்தடை நீங்கும்.

* அக்னி காவடி எடுத்தால் திருஷ்டி தோஷம் பில்லி சூனியம் மற்றும் செய்வினை நீங்கும்.

* கற்பூரக் காவடி எடுத்தல் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும்.

* சர்ப்பக் காவடி எடுத்தால் குழந்தை வரம் கிடைக்கும்.

* மஞ்சள் காவடி எடுத்தால் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

* சேவல் காவடி எடுத்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

* மலர் காவடி எடுத்தால் நினைத்தது நிகழும்.

* தேர் காவடி எடுத்தல் என்பது உயிர் பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்க எடுக்கும் காவடியாகும்.

* மச்சக் காவடி எடுத்தால் வழக்கு விஷயங்களில் இருந்து விடுபட நேர்மையான தீர்ப்பு கிடைக்கும்.

* பழக் காவடி எடுத்தால் செய்யும் தொழிலில் நல்ல லாபம் பெருகும்.

* மயில் காவடி எடுத்தால் இல்லத்தில் இன்பம் நிறையும். குடும்பப் பிரச்னை நீங்கும்.

* வேல் காவடி எடுத்தால் எதிரிகள் நம்மைப் பார்த்து அஞ்சி ஓடுவார்கள்.

கந்தன் மீது முழு நம்பிக்கை வைத்து ஆடி கிருத்திகை தினத்தில் முறையாக விரதமிருந்து காவடி எடுத்தால் கந்தன் மனம் மகிழ்ந்து வேண்டியதை வேண்டியபடி அருளுவார்.

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

SCROLL FOR NEXT