பெண்கள் பொதுவாகவே விரதம் மேற்கொள்வதை அதிகமாகவே விரும்புவார்கள். அவர்களின் குடும்ப நலனுக்காகவே வாழ்வதால் விரதத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்ந்து கொண்டு தான் இருப்பார்கள்.
என்னதான் அமாவாசை விரதம், பவுர்ணமி விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் மேற்கொண்டாலும் கூட ஏகாதசி விரதத்துக்கு தனி மகத்துவம் உண்டு என்றே சொல்லலாம். பெருமாளை வழிபடுபவர்களே பெரும்பாலும் இந்த ஏகாதசியை கடைப்பிடிக்கிறார்கள்.
மாதம் இருமுறை என வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசிகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சயன ஏகாதசி, உத்தான ஏகாதசி மற்றும் பரிவர்த்தன ஏகாதசி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சயனம் என்ற படுத்திருக்கும் கோலம். பெருமாள் திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் மீது படுத்த நாளே இந்த சயன ஏகாதசியாக அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் உண்ணாவிரதம் இருப்பது அனைவருக்கும் சிறந்த பலனை அளிப்பதாக கருதப்படுகிறது. காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமலை பெருமாளை நாமத்தை ஓதி, அவரை வழிபட்டால் நாம் நினைத்தது உடனே நிறைவேறும் என நம்பப்படுகிறது.மேலும் இந்த நாளில் ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்றும், விளக்கு தானம் செய்தால் கனவிலும் நினைக்காத நல்ல வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது.குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் நிச்சயம் திருமணம் கைக்கூடும் என அசைக்க முடியாத நம்பிக்கையாக கருதப்படுகிறது.