சுவர்ண பாதாள சனீஸ்வரர்
சுவர்ண பாதாள சனீஸ்வரர் 
ஆன்மிகம்

தலையெழுத்தை நிர்ணயிக்கும் பாதாள தங்க சனீஸ்வரர் அருளும் திருத்தலம்!

ஆர்.ஜெயலட்சுமி

பார்வதி, பரமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சமயம். அந்த தெய்வத் திருமணத்தைக் காண எண்ணற்ற தேவர்கள், ரிஷிகள், மகான்கள், முனிவர்கள் வரத் தொடங்கினர். அவர்களுள் அகஸ்தியர், பரத்வாஜர், வசிஷ்டர், வால்மீகி போன்றவரும் அடங்குவர். தேவலோகத்தில் இருந்து அனைவரும் பூலோகம் நோக்கி திரண்டதில் காஞ்சிபுரமே நிரம்பி வழிந்தது. முனிவர்கள் பலரும் தங்களது நித்ய அனுஷ்டானங்களையும் பூஜைகளையும் செய்யத் தகுந்த இடம் இன்றி திண்டாடினர்.

ஆகவே, காஞ்சிபுரத்தில் இருந்து வெளிவந்து காஞ்சியைச் சுற்றியுள்ள தீர்த்த பிரதேசங்களுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டனர். தற்போது பாலாறு என்றழைக்கப்படும் வேகவதி நதிக்கரையில் முனிவர்கள் தங்குவதற்கு குடில்கள் அமைத்து தங்களது அனுஷ்டானங்களைத் தொடர்ந்தனர். பரமேஸ்வரரின் திருமணம் சுபமாக நடந்தேறியது. அகமகிழந்த ஈசன், உடனிருந்து வாழ்த்திய முனிவர்களிடம், “நீங்கள் வேண்டும் வரம் என்ன?” என்று கேட்க அவர்களோ, “என்றென்றும் தாங்கள் எங்களை ஆசீர்வதித்து அருள வேண்டும்” என்றனர்.

அவர்களின் தன்னலமற்ற கோரிக்கையை ஏற்ற இறைவன், “வேகவதி நதிக்கரையில் தாங்கள் அனைவரும் என்னை எங்கெங்கு முறைப்படி பூஜித்தீர்களோ, அதே  க்ஷேத்ரங்களில் தங்களின் பெயர் கொண்டே யாம் அருள்புரிவோம். பலரும் வழிபடும் வகையில் அங்கே ஆலயங்கள் அமையட்டும்” என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

ஈசன் அருளியபடி முனிவர்கள் ஸ்தாபித்த க்ஷேத்ரங்கள்தான், ‘ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்’ என்று அழைக்கப்பட்டு பலராலும் வழிபடப்படுகிறது. பரத்வாஜர் வழிபட்ட ஈசன் பரத்வாஜீஸ்வரர் என்றும், வசிஷ்டர் குடில் அமைத்து வழிபட்ட ஈசன் வசிஷ்டேஸ்வரர் என்றும், வால்மீகி வழிபட்ட ஈசன் வால்மீகிஸ்வரர் என்றும், கௌதமர் வழிபட்ட ஈசன் கௌதமேஸ்வரர் என்றும், காசியபர் வழிபட்ட ஈசன் காசியபேஸ்வரர் என்றும், அத்திரி முனிவர் வழிபட்ட ஈசன் திருமந்தீஸ்வரர் என்றும் அவர்கள் பெயர் கொண்டே அழைக்கப்பட்டன.

சிறப்புமிக்க அந்த திருமந்தீஸ்வரர் அமைந்த இடம்தான் வாலாஜாபேட்டை என்று அழைக்கப்படும் அகத்தீஸ்வரமாக அறியப்படுகிறது. இங்குதான் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஆன விக்ரகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் இவர் பாதாள சனீஸ்வரனாக அருள்புரிகிறார். அவருடன் செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வராகருக்கும் சேர்த்து ஆலயம் அமைந்துள்ளது. ஈசான மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனி சன்னிதியில் சிறப்பான தோற்றத்தில் சனி பகவான் காட்சி தருகிறார்.

இதேபோல் லட்சுமி வராகரும் சிறப்பான தோற்றத்தில் காட்சி தருகிறார். வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வட்ட வடிவ ஆலயத்தில் அருள்கிறார் இப்பெருமான். கருவறையில் கிழக்கு நோக்கி லட்சுமி வராகர் நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் மடியில் லட்சுமி தேவியை அமர்த்தி தனது இடது கையால் அணைத்த வண்ணம் காட்சி தருவது சிறப்பு.

ஆன்மீகக் கவிதை - தமிழ் வளர்த்த சமயக் குரவர்!

அதிக மனக்கவலையின் பரிசு உடல் பருமன்; எப்படித் தெரியுமா?

The Color Code: A Child’s Perspective on Pink and Blue!

குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!

‘A Silent Voice’ – that talks about friendship and forgiveness!

SCROLL FOR NEXT