Tilottama 
ஆன்மிகம்

பாண்டவர்களுக்கு நாரதர் கூறிய திலோத்தமாவின் கதை!

ராஜமருதவேல்

னவாசத்தில் இருந்த பாண்டவர்களை சந்திக்க வந்த நாரதர், துருபத கன்னிகையின் அழகைப் பார்த்து அவர்களுக்கு அப்சரஸ் திலோத்தமையின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

ஹிரண்யகசிபுவின் வழிவந்த அசுரன் நிசும்பாவிற்கு சுந்தா, உபசுந்தன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் பிரிக்க முடியாத அளவிற்கு ஒருவர் மீது ஒருவர் சகோதர பாசத்துடன் இருந்தார்கள். ராஜ்யம், அரண்மனை, படுக்கை, உணவு, இருக்கை வரை பகிர்ந்து கொண்டார்கள். அசுர சகோதரர்கள் சேர்ந்து மூன்று உலகங்களையும் கைப்பற்ற முடிவு செய்து விந்திய மலைக்கு சென்று பிரம்மதேவரை நோக்கி தவமிருந்தார்கள். தவத்தை மெச்சிய பிரம்மா மகிழ்ச்சியடைந்து அவர்கள் முன் தோன்றினார். மூவுலகையும் கைப்பற்ற பெரும் சக்தியும் சாகா வரமும் வேண்டும் என்று அசுரர்கள் கேட்டார்கள். ‘சாகா வரமும், மூவுலகும் வெல்லும் வரம் தர முடியாது’ என்று பிரம்மன் மறுத்து வேறு வரம் கேட்கச் சொன்னார்.

யோசனைகளுக்குப் பின் அசுர சகோதரர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கொன்றால் மட்டுமே இறக்க வேண்டும். வேறு எவராலும் தங்களைக் கொல்ல முடியாது என்ற வரத்தினை கேட்டார்கள். பிரம்மனும் அந்த வரத்தினை அளித்தார். மிகவும் அன்புமிக்க அவர்களுக்குள் சண்டை வராது என்று நினைத்து அவர்கள் பூமியிலும் விண்ணுலகிலும் மற்றவர்களோடு சண்டையிட்டனர். மூன்று உலகங்களையும் வென்றனர். யாராலும் அவர்களை அழிக்க முடியவில்லை.

தேவர்கள் வரம் கொடுத்த பிரம்மாவிடம் சரணடைந்தார்கள். பிரம்மா, தேவலோக சிற்பி  விஸ்வகர்மாவை அழைத்து மிக அழகான ஒரு பெண்ணை உருவாக்கும்படி கூறினார். விஸ்வகர்மாவும் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு சிறந்த விஷயங்களிலிருந்தும் அழகின் சாரத்தை எடுத்து மிகவும் அழகான ஒரு அப்சரஸ் தேவதையை உருவாக்கினார். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகள் அழகிலும் அவள் உருவானதால் அவளுக்கு திலோத்தமா என்று பெயரிட்டு பிரம்மா உயிர் கொடுத்தார்.

sundhan, Uba sundhan

பின்னர் அழகிய அப்சரஸ் தேவதை திலோத்தமா தனது பணியை நிறைவேற்ற பூமிக்குச் சென்றாள். அசுர சகோதரர்கள் இருக்கும் பகுதியில் அந்த அப்சரஸ் தேவதை அடிக்கடி நடமாடினாள். பார்த்த உடனேயே சுந்தனுக்கும் உபசுந்தனுக்கும் திலோத்தமா மீது மையல் வந்து விட்டது. அவர்கள் அவளைப் பார்த்த நொடியில் அவள் மீது காதலில் விழுந்தார்கள். அப்சரஸ் தேவதையும் அவர்களது ஆசையை மேலும் தூண்டும் வகையில் அங்கு நடனமாடத் தொடங்கினாள். அசுரர்கள் திலோத்தமையின் அழகில் மயங்கிக் கிடந்தார்கள். அவர்களுக்கு அவள் அழகை தவிர, உலகமே மறந்து போனது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் அதிகமாக அப்சரஸ் மீது உரிமை கொண்டாடத் தொடங்கினர். சுந்தா அவளின் வலது கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, உபசுந்தன் இடது கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான். ஆனால் அவள் ‘இருவரில் யாராவது ஒருவருக்குத்தான் நான் சொந்தமாக முடியும், அந்த ஒருவர் யார் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று சண்டையை கிளப்பி விட்டாள். இருவரும் அவளுக்காக போரிட ஆரம்பித்தார்கள். சுந்தனும் உபசுந்தனும் அவள் தன்னுடைய காதலி தனக்கே சொந்தம் என்று வாதம் செய்தனர். வாதம் முற்றி சண்டை வந்தது. இருவரில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கே திலோத்தமை என்று முடிவுக்கு வந்தனர். ஆனால், சண்டையின் முடிவில் இருவருமே முடிந்து போயினர்.

நாரதர் இந்தக் கதையை சொல்லி முடித்ததும் பாண்டவர்களுக்கு அதன் காரணம் புரிந்தது. திரெளபதி மிக அழகியப் பெண்ணாக இருந்தாலும் சகோதரர் ஐவருக்கும் சொந்தம் என்றாலும் நாங்கள் நிச்சயம் ஒற்றுமையுடன் இருப்போம். இதுதான் திரெளபதிக்கும் விருப்பம் என்று பாண்டவர்கள் கூறினர்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT