பிரம்மோற்சவம்  
ஆன்மிகம்

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் எப்போது தெரியுமா?

விஜி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது.

திருப்பதி ஏழுமலையானை தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பூலோக வைகுண்டமாக கருதப்படும் திருப்பதி கோயிலில், கடந்த மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் வெகுவிமரிசையாக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், நவராத்திரி பிரமோற்சவம் வரும் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, வரும் 19ஆம் தேதி கருட வாகன புறப்பாடு, 22ஆம் தேதி தங்கத் தேரோட்டம், 23 ஆம் தேதி சக்கர ஸ்நானம் போன்றவை நடைபெறும் எனத் தெரிவித்தார். வருடாந்திர பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கொடியேற்றம், கொடி இறக்கம், திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் இந்த நவராத்திரி பிரமோற்சவத்தில் நடைபெறாது எனவும் கூறினார்.

பிரமோற்சவத்தை முன்னிட்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசனத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகக் தெரிவித்தார். அதே போல, கல்யாண உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT