சிவலிங்க அபிஷேகம் https://www.pothunalam.com/
ஆன்மிகம்

இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி!

ஆர்.ஜெயலட்சுமி

கோடைக்காலம் என்றதுமே நினைவிற்கு வருவது அக்னி நட்சத்திரம்தான். அக்னி நட்சத்திர வெயில், சித்திரை வெயில், கத்திரி வெயில், கோடை வெயில் என பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மே 4ம் தேதி தொடங்கி, மே 28ம் தேதி வரை இந்த அக்னி நட்சத்திரம் நடைபெற்று முடிந்தது. இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி ஆகும். அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

வைகாசி மாதம் 17ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். சித்திரை மாதத்தில் பரணி மூன்றாம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என பஞ்சாங்கம் கூறுகிறது. இந்தக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். அறிவியல்படி சூரியன் என்பது ஒரு கோளாக இருந்தாலும், அதுவும் ஒரு விண்மீன்தான். அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல, பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும்.

சூரிய பயணத்தின் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அப்படி அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்கள் வெயிலின் தாக்கம் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வெடிப்புகள் ஏற்படும். இந்த வெடிப்புகளின் இடையில் இருந்து பூமிக்குள் இருந்து வெப்பம் வெளியாகும்.

வைகாசி மாத இறுதியில் பெய்யும் மழை வயல்களின் வெடிப்பின் வழியாக பூமிக்குள் சென்று வெப்பத்தை தணித்து மீண்டும் வெடிப்புகள் மூடிக்கொள்ளும். அக்னி நட்சத்திரத்திற்கு இணையானது கார்த்திகை நட்சத்திரம் என்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி பகவான் ஆவார்.

அக்னி நட்சத்திர தோஷ காலம் முடியும் நாளில் எல்லா கோயில்களும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் .இதை அக்னி கழிவு என்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இந்த நிவர்த்தி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தின்போது இறைவனை வணங்கினால் நம் தோஷங்கள் அனைத்தும் விலகும். வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். அக்னி நட்சத்திர தோஷம் இன்றுநிறைவு பெறுவதை ஒட்டி இன்று அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதை தரிசித்து அருள் பெறுவோம்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT