Singapore tourist places Img Credit: Travel news
பயணம்

சிங்கப்பூர்க்கு டூர் போறீங்களா? அப்போ இந்த 10 இடத்த மிஸ் பண்ணிடாதீங்க!

கண்மணி தங்கராஜ்

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் ஒன்றுதான் சிங்கப்பூர். இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சீனர்கள் மற்றும் தமிழர்கள் தான் பரவால காணப்படுவர். அதோடு வாழ்வாதாரத்திற்கும் சரி சுற்றுலாப் பயணங்களுக்கும் சரி சிங்கப்பூர் உங்களின் மிகச்சிறந்த சரியான தேர்வாக இருக்கும். நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்! சிங்கப்பூரிற்கு சுற்றுலாவிற்காக செல்வோர் இந்தப் பத்து இடங்களை மிஸ் பண்ணீடாதிங்க.

சிங்கப்பூர் ஃப்ளையர்: (Singapore Flyer)

Singapore Flyer

சிங்கப்பூர் ஃப்ளையர் ஒரு மாபெரும் ராட்டினம் ஆகும். இது 2008 ஆம் ஆண்டு  திறக்கப்பட்டபோது, இதுவே உலகின் மிக உயரமான பெர்ரிஸ் சக்கரமாக விளங்கியது. வண்ணமயமான கண்களைக் கவரும் மின்விளக்குகள் பொருத்திய இந்த ஃப்ளையரானது  நகரத்திற்கு மேலே வட்டமிடும்போது சுமார் 28 பேர் வரை இதில் அமர்ந்து ரசிக்கலாம். இந்த சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறி நீங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் பார்க்கலாம். மேலும் இது உலகின் மிகப்பெரிய ராட்சத கண்காணிப்பு சக்கரம் என்றும் அறியப்படுகிறது.

மெரையின் ஃபிஷரிஸ்: (Marine Fisheries)

marine fisheries in singapore

கடல்வாழ் உயிரினங்களின் உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்கு சிங்கப்பூரின் இந்த ‘மெரையின் ஃபிஷரிஸ்’ என்ற இடமானது நிச்சயமாக சிறந்த அனுபவத்தை தரும். இங்கு மீன்வளத்தில் சுமார் 1,00,000 க்கும் மேற்பட்ட கடல் இனங்கள் உள்ளன. மீன்களின் உலகத்தை அருகில் பார்க்க வேண்டும் என்றால் இந்த இடம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.

நைட் சஃபாரி: (Night Safari)

Night Safari singapore

சிங்கப்பூரின் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நைட் சஃபாரி 1984 இல் மாண்டாய் நகரில் திறக்கப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது  இரவு நேர உயிரியல் பூங்காவாகும். மேலும் இது ரிவர் வொண்டர்ஸ் , சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை, பறவை சொர்க்கம் மற்றும் மழைக்காடு காட்டு ஆகியவற்றுடன் மண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் ஒரு பகுதியாகும். அதோடு  இது நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இங்கு தற்போது 900 க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. அவை 100 க்கும் மேற்பட்ட உயிரினங்களைக் குறிக்கின்றன. இந்த இடத்தை காண வருபவர்கள்  விலங்குகளை ரசித்து கொண்டே, இங்குள்ள உணவகங்களில் உணவருந்தி மகிழலாம்.

சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா: (Singapore Botanic Gardens)

Singapore Botanic Gardens

சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா என்பது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். அதோடு இது அதிகளவிலான மக்களால் பார்வையிடப்பட்ட பகுதியாகவும் கருதப்படுகிறது. இந்த தோட்டத்தில் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட தாவரவகைகள் உள்ளன. மேலும் இது தான் உலகின் முதல் குழந்தைகளுக்கான தோட்டமாகும்.

செந்தோசா: (Sentosa)

Singapore Sentosa

செந்தோசா சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரபலமான தீவாகும். செந்தோசா என்ற வார்த்தைக்கு ‘மகிழ்ச்சி’ எனப்பொருள். சுற்றுலாவின் சிறந்த அனுபவத்தை அளிக்கும் இந்த இடத்தை நோக்கி, ஆண்டொன்றுக்கு சுமார் இருபது மில்லியன் அளவிலான  மக்கள் படையெடுத்து வருகின்றனர்.  2 km நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை, 14 தங்கும்  விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் உள்ளிட்டவை அடங்கிய தனி  உலகமாக இந்த செந்தோசா தீவு அமைந்து எண்ணிலடங்கா சுற்றுலாப் பயணிகளை தன்வசம் கவர்ந்திழுக்கிறது.

ஆர்ச்சர்ட் ரோடு: (Orchard Road)

Singapore Orchard Road

ஆர்ச்சர்ட் ரோடு, இது சிங்கப்பூரின் முக்கிய கடை வீதியாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்கூட அடிக்கடி வருகை தருகின்றனர். மால்கள், உணவகங்கள், காபி ஷாப்ஸ், இரவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் என பலவும் ஒரே இடத்தில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை அதிகமாக தேர்வு செய்து வருகின்றனர்.

யுனிவர்சல் ஸ்டுடியோ: (Universal Studios)

Singapore Universal Studios

யுனிவர்சல் ஸ்டுடியோ இது புகைப்படப் பிரியர்களுக்கான சிறந்த இடமாகும். இந்த இடமானது சென்டோசா தீவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் அதிகப்படியான பொழுதுபோக்கு சிறப்பம்சங்கள் பெருகிக் காணப்படுகின்றன. அதோடு   இது குடும்பத்துடன் பயணம் செய்யும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

கார்டன்ஸ் பை தி பே: (Gardens by the Bay)

Singapore Gardens by the Bay

கார்டன்ஸ் பை தி பே என்பது, நகரத்தில் பசுமை மற்றும் தாவர மேம்பாடு  மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இது மூன்று தோட்டங்களைக் கொண்டுள்ளது. இத்தோட்டமானது 50 மீட்டர் (160 அடி) உயரம் வரை மரம் போன்ற அலங்கரிக்கப்பட்ட கட்டமைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதன் காட்சியானது மேலிருந்து பார்த்தால் மிகவும் பசுமையாகவும் அழகாவும் நம்முடைய கண்களுக்கு விருந்தளிக்கும். அதோடு இங்கு பல வகையான தாவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்ற புகழைப் பெற்றுள்ளது.

லிட்டில் இந்தியா: (Little India)

Singapore Little India

Singapore Little Indiaலிட்டில் இந்தியா என்பது முழுக்க முழுக்க தமிழ் இனத்தவருக்கான குடியிருப்புப் பகுதியாகும். ‘லிட்டில் இந்தியா’ சிங்கப்பூர், என்பது சிங்கப்பூர் ஆற்றின் (Singapore River) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும்.

உள்ளூர் தமிழ் மக்கள் இதனைத் ‘தேக்கா’ என்றும்  அழைப்பதுண்டு. தேக்கா என்பது லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஒரு அங்காடியைக் குறிக்கிறது. இங்கு பல்வகை உணவகங்களும், வணிகக் கடைகளும் உள்ளன. மேலும் ஷாப்பிங்க்கான இடமாகவும் எண்ணிலடங்கா மக்களின் வாழ்வாதரதிற்கு வழிவகுக்கும் இடமாகவும் விளங்குகிறது.

பட்டாம் பூச்சி தோட்டம்: (Butterfly Garden)

singapore butterfly garden

சிங்கப்பூர் ஜாங்கி விமான நிலையத்தில் உலகின் முதல் பட்டாம்பூச்சி தோட்டம் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பூக்களும், தாவரங்களும், பசுமை நிறைந்து காணப்படுகின்றன. அதோடு அங்கு 6 மீ உயரத்தில் இருந்து வீழ்கின்றன கிரோட்டோ நீர்வீழ்ச்சி கண்கொள்ளா இன்பக் காட்சி! வருடத்தின் வெவ்வேறு பருவங்களில் 40 இனங்களில் இருந்து 1,000 வெப்பமண்டல பட்டாம்பூச்சிகளையும் அங்கு நாம் சந்திக்கலாம்.

சிங்கப்பூரில் இந்த 10 இடங்களும் பார்வையாளர்களை அதிகமாக ஈர்க்கும்  இடங்களாகும். எனவே சிங்கப்ப

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT