Zuru Stays, Egypt. Image Credits: Airbnb
பயணம்

உலகில் உள்ள 6 வித்தியாசமான ஹோட்டல் அறைகள்!

நான்சி மலர்

நாம் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு பயணம் செய்யும் பொழுது தங்குவதற்காக ஹோட்டல் அறைகளை புக் செய்வதுண்டு. ஆனால், உலகில் உள்ள சில வித்தியாசமான ஹோட்டல் அறையை அங்கிருக்கும் அழகினை ரசிப்பதற்காகவே பிரத்தியேகமாக மக்கள் புக் செய்து தங்குகிறார்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அத்தகைய வித்தியாசமான 6 ஹோட்டல் அறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1.Zuru Stays, Egypt.

எகிப்தில் இருக்கும் Zuru Stays என்னும் ஹோட்டலில் இருக்கும் அறையின் ஜன்னலை திறந்தால், உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட்டை தெளிவாக பார்க்க முடியும். இந்த அழகியக் காட்சியைக் காண்பதற்காகவே நிறைய பேர் இங்கு வந்து தங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Parc Omega Wolf Cabin, Canada

2. Parc Omega Wolf Cabin, Canada.

அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கும் இந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியிலே நடமாடிக்கொண்டிருக்கும் ஓநாய்கள் நம் அருகிலே வந்து செல்வதைப் பார்த்து ரசிக்க முடியும். இந்த த்ரிலிங்கான அனுபவத்தை அனுபவிப்பதற் காகவே நிறைய பேர் இந்த ஹோட்டலில் வந்து தங்கிச் செல்கிறார்கள்.

Galleria Vic Milano, Italy

3. Galleria Vic Milano, Italy.

ஆயிரம் வருடம் பழமையான ராஜா காலத்து கட்டிடத்தில் தான் இந்த ஹோட்டலையே கட்டியிருக்கிறார்கள். இந்த ஹோட்டல் ரூம் ஜன்னலில் இருந்து இந்த வரலாற்று மிக்க கட்டிடத்தையும், அதை சுற்றிப்பார்க்க வரும் மக்களுளையும் பார்த்து ரசிப்பது வேற லெவல் உணர்வைத் தரும்.

Luxotel, Jordon

4. Luxotel, Jordon.

இந்த ஹோட்டல்கள் பார்ப்பதற்கு செவ்வாய் கிரகத்தில் இருக்கும் காலனிகளைப் போலவே தெரிந்தாலும், இது பாலைவனத்திற்கு நடுவே அமைந்துள்ளது என்பதே உண்மையாகும். என்னதான் இந்த ஹோட்டல்கள் பாலைவனத்திற்கு நடுவேயிருந்தாலும், இந்த ஹோட்டலில் எல்லா வசதிகளுமேயிருக்குமாம். இந்த ஹோட்டலில் தங்குவது மார்ஸில் தங்குவது போன்ற உணர்வைத் தருவதாலேயே நிறைய பேர் இங்கே வருகிறார்கள்.

Marriott Falls View, Canada

5. Marriott Falls View, Canada.

உலகப்புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் தான் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் ரூமிலிருந்து நயாகரா நீர்வீழ்ச்சியை நம்மால் தெளிவாக பார்க்க முடியும். அந்த வித்தியாசமான அனுபவத்தை பெறுவதற்காகவே இந்த ஹோட்டலில் நிறைய பேர் வந்து தங்குகிறார்கள்.

Pula bungalov, Turkey

6. Pula bungalov, Turkey.

அடர்ந்த காட்டில் இருக்கும் ஆற்றுக்கு நடுவிலேதான் இந்த ஹோட்டலை கட்டியிருக்கிறார்கள். அதுவும் முழுதாக கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கும் அறையில் தங்கி இயற்கையை ரசிப்பது என்பது வேற லெவல் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த 6 ஹோட்டலில் உங்களை கவர்ந்தது எதுவென்று சொல்லுங்க பார்க்கலாம்.

'பெரிதினும் பெரிது கேள்' என்கிற கோட்பாட்டின் முக்கியத்துவம் தெரியுமா?

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் - அனுசரித்தால் போதுமா? வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

பொய்ப்பொருளும் மெய்ப்பொருளே! -எவ்வாறு?

மற்றவர் உணர்வுகளை புரிந்துகொண்டால் எல்லா உறவுகளும் உன்னதமே!

மனித மனதின் மகத்தான சக்தி!

SCROLL FOR NEXT