கோத்தகிரி ... 
பயணம்

கோத்தகிரி போறீங்களா? அங்கு பார்க்க வேண்டிய அருமையான இடங்கள் இதோ!

பிருந்தா நடராஜன்

கோத்தகிரி நீலகிரி மலைப் பகுதிகளுக்கு மத்தியில் இருக்கும் ஓர் இடம். பச்சைப் பசேல் என்று பசுமையான சூழல்‌‌. கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் போகும் வழியில் உள்ளது.

கேத்தரின் நீர்வீழ்ச்சி - catherine falls

catherine falls

கோத்தகிரியில் இருக்கும் கேத்தரின் நீர்வீழ்ச்சி அழகான இடம். நீலகிரி மலையின் இரண்டாவது மிக உயர்ந்த நீர் வீழ்ச்சி ஆகும். இது இரண்டு அடுக்குகள் கொண்ட நீர் வீழ்ச்சி ஆகும். சிறந்த இடம்... Don't miss to visit .

லாங் வுட் லோலா - longwood kotagiri

longwood kotagiri

மலையேற்றம் பயணிகளை ஈர்க்கும் இடம் இது. இங்கே பல்வேறு தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளை பார்க்கலாம்‌‌. வனக்காப்பகம் இருப்பதால் பயமில்லை.

ரங்கசாமி சிகரம் - rangaswamy peak

rangaswamy peak

தினம் தினம் நகர வாழ்க்கையில் அலுத்து சலித்து போனவர்கள் இயற்கை அன்னையின் அற்புதமான படைப்புகளைக் காணலாம். அதுவும் புகைப்படக் கலைஞர்களுக்கு சிறந்த இடம் இது. அவர்களுக்கு அந்த காட்சிகள் படம் எடுக்க ஆர்வமாக இருக்கும்.

கோடநாடு வியூ பாயின்ட் - kodanad view point

kodanad view point

கோத்தகிரியின் மிகவும் பிரபலமான ஒன்று கோடநாடு காட்சி முனை ஆகும். அங்கிருந்து நீலகிரி மலைகளின் அழகை ரசிக்கலாம். முக்கிய கோத்தகிரி நகரத்தில் இருந்து சுமார் 16 கி‌மீ தொலைவில் உள்ளது.

ஜான் சல்லிவன் நினைவுச் சின்னம் - john sullivan memorial

john sullivan memorial

ஜான் சல்லிவன் நினைவுச் சின்னம் 1855 இல் காலமான ஜான் சல்லிவன் நினைவாகக் கட்டப்பட்டது. அவர் நீலகிரி மலைகளின் வளர்ச்சி மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு காரணமாக இருந்தார். அவர் மேற்கொண்ட கடின உழைப்பை இந்த நினைவிடத்தை பார்வையிடுவதின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

எல்க் நீர் வீழ்ச்சி - elk falls

elk falls

கோத்தகிரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உயிலத்தி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நீர் வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகளின் பசுமை வசீகரிக்கும் அழகு என்பதில் சந்தேகமில்லை.

கோத்தகிரி அதன் அற்புதமான மலையேற்றம் பாதைகளால் சாகசப் பயணிகளின் அருமையான தேர்வாக இருக்கும். ஓடிவரும் ஆறுகள் தேயிலைத் தோட்டங்கள் பசுமையான சூழல்‌‌ நம் மனதுக்கு இதமாக இருக்கும்.

கோத்தகிரி செல்ல சிறந்த மாதங்கள் டிசம்பர் முதல் மே மாதம் வரை. குளிர் காலத்தில் வானிலை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT