Different Types Of Travel Bags Image Credits: Rollink
பயணம்

பயணத்தின்போது எடுத்துச் செல்வதற்கு என்னென்ன பேக் வகைகள் இருக்கு தெரியுமா?

நான்சி மலர்

ம் எல்லோருக்குமே விதவிதமான இடங்களுக்கு  பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையிருக்கும். அப்படி பயணம் செய்யும்போது ஏற்படும் முக்கியமான பிரச்னை, பத்திரமாக பொருட்களை எடுத்து செல்வதுதான். கண்டிப்பாக சிறந்த பேக்கை வாங்கினால் மட்டுமே சிரமம் இன்றி மகிழ்ச்சியாக பயணித்து விட்டு வர முடியும். இன்று எத்தனை வகையான டிராவல் பேக்குகள் இருக்கின்றன. அதில் எது நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேக்பேக் (Backpack)

பேக்பேக் மிகவும் பிரபலமான பேக் ஆகும். இது பயணம் செய்பவர்களின் முதல் சாய்ஸ்ஸாக இருக்கக்கூடியது. இந்த பேக்கை முதுகில் மாட்டி கொண்டு செல்வதால் அதிக தூரத்தையும் சுலபமாக கடக்கலாம். இது பலவிதமான சைஸில் வருவதால், அதிக தூரம் பயணிக்க பெரிய பேக் மற்றும் அருகிலே பயணிக்க வேண்டும் என்றால் சிறிதான பேக்பேக்கை தேர்வு செய்து கொள்ளலாம்.

டப்பிள் பேக் (Duffle bag)

டப்பிள் பேக்கை கைகளில் தூக்கி கொண்டோ அல்லது தோள்பட்டையில் மாட்டிக் கொண்டோ செல்வது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இது பார்ப்பதற்கு உருளையான வடிவத்தில் இருக்கும். எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் சேமிப்பது போல இருக்கும். இதை எடுத்து செல்வது சுலபம். உங்களுக்கு பைகளை எடுத்து செல்ல இடம் குறைவாக இருப்பின், டப்பிள் பேக் கொண்டு செல்வது சிறந்ததாகும்.

சூட்கேஸ் (Suitcase)

பயணத்திற்கு என்று பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது சூட்கேஸ் ஆகும். இது சதுர வடிவத்திலிருக்கும் நாடு விட்டு நாடு பயணம் செல்லும் பயணிகள் பெரும்பாலும் சூட்கேஸையே பயன்படுத்துவார்கள். இதில் பிடிப்பதற்கு கைப்பிடி மற்றும் சக்கரம் இருப்பதால் எடுத்து செல்வது சுலபம்.

டோட்டே பேக் (Tote bag)

இந்த பேக் தூரப்பயணம் செய்ய ஏற்றதில்லை என்றாலும் அருகில் சின்னதாக செய்யக்கூடிய பயணங்களுக்கு எடுத்து செல்லலாம். லெதர், காட்டனால் செய்யப்படும் இந்த வகை பேக் அதிக எடையில்லாமல், எடுத்து செல்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

வெய்ஸ்ட் பேக் (Waist bag)

இந்த பேக் சிறியதாக இருப்பதால் இடுப்பில் கட்டிக்கொள்ளலாம். இதில் மிகவும் முக்கியமான பொருட்களான போன், பர்ஸ், பாஸ்போர்ட், சாவி போன்ற சின்ன பொருட்கள் வைத்து கொள்ளலாம். தேவையான நேரத்தில் சுலபமாக எடுக்க உதவும்.

மெஸ்ஸெஞ்சர் பேக் (Messenger bag)

இதை கொரியர் பேக் அல்லது ஸோல்டர் பேக் என்றும் அழைப்பார்கள். இந்த வகை பேக் முக்கிய பத்திரங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளப் பயன்படுகிறது. தற்போது இந்த பேக் பல்வேறு டிசைன்களில் வருகிறது. இதை தோல்பட்டையில் அணிந்து கொள்வதால், ஏதேனும் பொருட்கள் தேவை என்றால் உடனடியாக பையிலிருந்து எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT