உலகில் சில இடங்கள், இப்படியெல்லாம் இருக்குமா என்று எண்ணவைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தும். அதேபோல் இந்தியாவிலும் சில இடங்கள் நாம் கற்பனை செய்துகூட பார்க்காத அளவிற்கு இருக்கின்றன. அதுபோன்ற 6 இடங்களைப் பற்றி பார்ப்போம். கட்டாயம் நீங்கள் நேரமிருக்கும்போது நேரில் சென்று ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்.
கொழுக்குமலைக்குக் கேரளா சாலை வழியாக சென்றாலும் இது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தாலுக்காவிற்கு உட்பட்டது. கொழுக்குமலையின் சிறப்பைக் காண வேண்டுமென்றால் முதலில் நீங்கள் அங்கு விடியற்காலையிலேயே சென்றுவிட வேண்டும். ஏனெனில் கொழுக்குமலையின் சிறப்பே அந்த வெள்ளை மெத்தை போல் காட்சியளிக்கும் மேகங்கல். கைக்கெட்டும் அளவில் நீங்கள் வெள்ளை மேகங்களைப் பார்க்கலாம். அந்த மேகங்களுக்கு நடுவில் சூர்ய உதயத்தின் போது விழும் கிரகணம் பார்ப்பதற்கு பேரற்புதமாக இருக்கும்.
உறைந்த நீர்வீழ்ச்சி என்றைழைக்கப்படும் இது காஷ்மீரில் உள்ளது. கோடைக்காலத்தில் மலைகளுக்கு இடையிலிருந்து பால் போன்ற நீர் கொட்டும் இந்த அருவி, குளிர்காலத்தில் அந்த நீர் அப்படியே உறைந்துக் காணப்படும். ஆகையால் இந்த இடத்திற்கு குளிர்காலத்தில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நீர் விழும் சமயத்திலேயே உறையும் இந்த அற்புதக் காட்சியை வாழ்வில் ஒரு முறையாவதுப் பார்த்துவிட வேண்டும்.
லடாக்கின் சால்ட் லேக் அருகில் உள்ள இந்தப் புகா பள்ளத்தாக்கு அற்புதமான மலைகள், குளிர்ந்த பாலைவனம் மற்றும் பரந்த கந்தகப் படிவங்களால் சூழப்பட்டது. இந்தப் பள்ளத்தாக்கில் இயற்கை அழகு, வெந்நீரூற்றுகள் மற்றும் மண் குளங்கள் அதிகம் இருப்பதால்தான் இது பார்ப்பதற்கரிய பள்ளத்தாக்காக உள்ளது.
உத்தரகாண்டில் உள்ள இந்தப் பூக்களின் பள்ளத்தாக்கிற்கு சென்றால் நீங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஓடைகளையும் வண்ண வண்ண பூக்களையும் பார்க்கலாம். குறிப்பாக மற்ற இடங்களில் பார்க்காதப் பல அரிய பூக்களையும் நீங்கள் இங்குப் பார்க்கலாம்.
குஜராத்தின் கட்ச் நகரில் அமைந்துள்ளது இந்த வெள்ளைப் பாலைவனம். கட்ச் கம்பீரமானத் தரிசு மற்றும் வெள்ளைச் சதுப்பு நிலங்கள் மற்றும் வென்மையான இளஞ்சிவப்பு ஃபளமிங்கோக்களை ( பூ நாரைப் பறவைகள்) கொண்ட இடமாகும். இந்தியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்தப் பாலைவனம் உலகின் மிகப்பெரிய உப்புப் பாலைவனமாகக் கருதப்படுகிறது.
மனிப்பூரில் அமைந்துள்ள இந்த லோட்டாக் ஏரி ஒரு விசித்திரமான இடமாகக் கருதப்படுகிறது. அதாவது இந்த ஏரியில்தான் மிதக்கும் பூங்கா உருவாகியுள்ளது. இதுவே இயற்கையின் விசித்திர அழகாகக் கருதப்படுகிறது.