பயணம்

மேட்டூர் அணை சில சுவாரஸ்ய தகவல்கள்!

பொ.பாலாஜிகணேஷ்

ணையின் வரலாறினை பார்க்கும் போது மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. 10ஆயிரம் பணியாளர்களை கொண்டு 9ஆண்டு கால உழைப்பின் பயனாக 1934ஆம் ஆண்டு கட்டிமுடிக்கபட்ட இவ்வணையின் அதிகபட்ச உயரம் 214அடி, இதன் நீர் தேக்கஅளவு 120 அடி உயரமாகும்.

3-1700 மீ நீளமும், 171அடி அகலம் கொண்ட 9347 கோடி கனஅளவு நீர் தேக்க கொள்ளளவு கொண்ட இந்த நீர்தேக்கத்திற்க்கான நீர்வரத்து கர்நாடக மாநிலத்தின் கபினிஅணை மற்றும் கிருஷ்ணராஜாசாகர அணைகளிலிருந்து பெறப்படுகின்றது.

16 கண் மதகுகள் கொண்ட இந்த அணையில் இரண்டு சுரங்க மின்நிலையங்கள் உண்டு. இவற்றில் முதல் மின்நிலையம் பிரிடிஷ் ஆட்சிக்காலத்திலும், இரண்டாம் மின்நிலையம் இந்திய குடியரசு ஆட்சியிலும் கட்டப்பட்டது.

மேட்டூர் அணை பற்றிய நினைவு கொள்ளத்தக்க குறிப்புகள் உள்ளன. 1801 பிரிடிஷ் கிழக்கிந்திய சபை இந்த அணையை கட்ட முயற்சி எடுத்தபோது, மைசூர் சமஸ்தானத்தின் எதிர்ப்பால் இம்முயற்சி கைவிடப்பட்டது.

எனினும் இரண்டாம் முறையாக 1835 சர் ஆர்தர்காட்டன் என்பவரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு மைசூர் சமஸ்தானத்தின் தொடர் எதிர்ப்பால் இம்முயற்சியும் இரண்டாம் முறையாககைவிடப்பட்டது.

ஆனால் 1923 திருவாங்கூர் சமஸ்தனத்திற்குட்பட்டிருந்த திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் முயற்சியால் 1924 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த வரும் அப்போது சென்னையில் வசித்து வந்தவருமான ஸ்டான்லி என்ற பொறியாளரை கொண்டு இவ்வணை கட்டபட்டது. அவரின் பெயரால் இவ்வணை ஸ்டான்லி அணை என்றழைக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தின் மேட்டூர் பகுதியில் இவ்வணை நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33கும் மேற்பட்ட கிராமங்கள் இணைத்து கட்டப்பட்ட அணையாகும். கிபி 10ஆம் நுற்றாண்டில் சோழ மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும், அதற்க்குபின் கருவறை அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலும், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டஇரட்டைகோபுர கிறிஸ்தவ ஆலயமும் இன்றும் அடையாள சின்னங்களாய் அணையின் நடுவில் உள்ளது. அணையின் நீர்மட்டம் 80அடிக்கு கிழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழே குறையும்பபோது கிறிஸ்தவ கோபுரமும் தெரியும்.

சோழர்மன்னர் ஆட்சியில் காலத்தில் கட்டப்பட்ட நந்தி முகப்பும் , அதற்க்கு பின் கருவறை அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலும் , ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டஇரட்டைகோபுர கிறிஸ்தவ ஆலயமும் இன்றும் அடையாள சின்னங்களாய் அமைந்துள்ளது.

10-1934 ஆம் ஆண்டில் முதன் முறையாய் ஸ்டான்லி நீர் தேக்கம் நீரில் நிறைந்தது. நீர் இருந்தாலும், குறைந்தாலும் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதோடு சிதைந்த, காலத்தின் அழியா நினைவு சின்னங்களையும் தன்னுள் அடக்கி நின்று காலத்தின் பெருமையை உணர்த்தி மக்கள் மனதை குளிர் விக்கின்றது மேட்டுரின் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.

வீட்டுக்கு அழகு சேர்க்கும் போன்சாய் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு!

பால் Vs தயிர்: குடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா? 

நிலக்கடலை சேவு மற்றும் சேமியா அடை செய்யலாம் வாங்க!

டை அடிக்கும் போது இதெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்!

முடிவை எடுக்கும் முன் முயற்சிகள் முக்கியம்! அதிகரிக்கும் விவாகரத்துகள்!

SCROLL FOR NEXT