தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகிய மலைத்தொடர். இந்த மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலைத்தொடரில் ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளது. வனவிலங்கு சரணாலயமாகவும் மேகமலை விளங்குகிறது.
வனவிலங்குகள் அதிகம் உள்ள பகுதி. இரவு பயணத்திற்கு அங்கு செல்ல அனுமதில்லை. மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் புலி, யானை, கரடி, மான், சிறுத்தை, புள்ளி மான், குரைக்கும் மான், சாம்பார் மான், சுட்டி மான், ராட்சத அணில், இந்திய பறக்கும் நரி, இந்திய ராட்சத அணில், பனை அணில், கவுர் போன்ற விலங்குகள் இங்கு வாழ்கின்றன. மேலும், பறவைகள், புள்ளிப் புறா, கருப்பு புல்புல், வெள்ளை வயிறு கொண்ட மரங்கொத்தி, பச்சி இனங்களும் இங்கு வாழ்கின்றன.
குரங்கணி மலைப் பயணம் சவாலான மற்றும் மனதை மயக்கும் மலையேற்றங்களில் ஒன்றாகும். சிறிய அழகிய நீரோடை பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இங்கு சில நேரங்களில் காட்டுப் பூனைகள், கௌர், நீலகிரி லங்கூர் மற்றும் சிறுத்தைகளைப் பார்க்க முடியும்.
தேயிலைத் தோட்டங்களின் அற்புதமான காட்சி. மரங்கள் மற்றும் சிறிய நீர்வீழ்ச்சிகள் நிறைந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இங்கு செல்லும்போது சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லலாம் என தோன்றும் அற்புதமான இடம்.
சேரனின் வேடிக்கை பூங்கா குழந்தைகளுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு மிக்க அம்சமான இடம். அங்கு படகு சவாரி செய்ய ஏற்ற இடம். பூங்காவில் மீன்கள், குழந்தைகள் பூங்கா, படகு சவாரி, சிறிய பறவைகள் மற்றும் விலங்குகள் இங்கு இருக்கின்றது. குடும்பதுடன் மற்றும் நண்பர்களுடன் உல்லாசமாக செல்ல ஏற்ற இடம்.