Valentine’s day special
Valentine’s day special Imge credit: Times of india
பயணம்

Valentine’s day special: காதலர் தினத்தன்று எங்க ட்ரிப் போகலாம்னு குழப்பமா?.. அப்போ கண்டிப்பா இதப் படிங்க!

பாரதி

காதலர் தினம் நெருங்கிக்கொண்டே வருகிறது. உங்கள் துணையுடன் எங்கயாவது ட்ரிப் போக வேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்துவிட்டீர்களா? காதலர்கள் செல்ல தாஜ்மஹாலை விட்டால் வேறு என்ன உள்ளது? என்ற கேள்விகள் வருவது வழக்கம்தான். ஆனால் இந்தியாவில் இயற்கையே காதல் சூழலுக்கு ஏற்ற வகையில் பல தலங்களை உருவாக்கியுள்ளது. வாருங்கள் காதலர் தினத்தன்று எங்கெல்லாம் செல்லலாம் என்பதைப் பார்ப்போம்.

கோவா:

Goa

கோவாவின் கடற்கரைகள், கிராமங்கள் போன்றவை பார்ப்பவர்களை மெய்மறக்க வைக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுத்தான். குறிப்பாக இங்கு காதலர்களுக்கு சூர்ய அஸ்தமனத்தைப் பார்ப்பதும், நீர் விளையாட்டுகள் விளையாடுவதும் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். மண்டோவி ஆற்றங்கரையில் உங்கள் துணையுடன் இரவு உணவு எடுத்துக்கொள்வது ஒரு கற்பனை உலகத்தில் இருப்பது போன்ற அனுபவமாக இருக்கும்.

சிம்லா மற்றும் மணாலி:

Simla manali

வெள்ளைப் பனி மலை போர்த்திய இந்த இடங்களில் மலை ஏறி காதலர் தினத்தைக் கழிப்பது என்றென்றும் மறக்கமுடியாத ஒரு காதல் பயணமாக இருக்கும். அதன்பின்னர் சிம்லாவின் மால், மணாலியின் ஹடிம்பா, ரோஹ்தாங் பாஸ் போன்ற இடங்களுக்கு சென்று பக்தியையும் காதலையும் சேர்த்து அனுபவிக்கலாம்.

உதய்பூர், ராஜஸ்தான்:

Udhaiypur

‘ஏரிகளின் நகரம்’ என்றழைக்கப்படும் உதய்பூர், அழகான ஏரிகள், அரண்மனைகள், வரலாற்று கட்டடக் கலைகள் ஆகியவற்றிற்கு பெயர் போனது. பிச்சோலா ஏரியின் படகு சவாரி, சிட்டி பேலஸ், ஜக் மந்திர் மற்றும் ஜக் நிவாஸ் தீவுகள் ஆகிய இடங்களுக்கு நீங்கள் செல்லலாம்.

கேரளா:

Kerala

இயற்கை அரசி என்றால் அது கேரளா தான். குளிருக்கும், மலைகளுக்கும், நீர் வளங்களுக்கும் இங்கு மட்டும் பஞ்சமே இருக்காது. கேரளாவில் ஆலப்புழா, மூணார், வர்க்கலா மற்றும் கோவளம் பீச் போன்ற இடங்களுக்கு நீங்கள் செல்லலாம். படகு சவாரி, இரவு கேம்ப் ஆகியவற்றை அனுபவிக்காமல் மட்டும் திரும்பிவிடாதீர்கள்.

அந்தமான் நிக்கோபர் தீவு:

andaman nicobar island

வெயிலிலிருந்து தப்பிக்க நீங்கள் அந்தமானுக்கு செல்லலாம். சுற்றிலும் கடற்கரைகள், குளிர் காற்று, இரவு நிலா, பீச் கேண்டில் லைட் டின்னர் ஆகியவையே போதும் இந்த காதலர் தினத்தை எப்போதும் நீங்கள் மறக்காமல் இருப்பதற்கு.

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்:

Jaipur

‘பிங்க் சிட்டி’ என்றழைக்கப்படும் ராஜஸ்தான் வரலாற்று கோட்டைகளுக்கும் வண்ணமயமான சந்தைகளுக்கும், தனித்துவமான கலாச்சாரத்திற்கும் பெயர் போனது. காதலர்கள் அங்கு கட்டாயம் அனுபவிக்கும் ஒன்று ஹாட் ஏர் பலூன் சவாரி. அதேபோல் மால், பேலஸ் போன்ற இடங்களுக்கும் செல்லலாம்.

ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார்:

Rishikes and haridwar

காதலர் தினத்தை ஆன்மீகத்தோடும், சாகசங்களோடும் கழிக்க வேண்டும் என்றால், இந்த பயணத்தைத் தேர்ந்தெடுங்கள். கங்கை கரை அமைதி, கோவில்களின் நேர்மறை வைப் மற்றும் சாகச விளையாட்டுகள் ஆகியவை உங்கள் காதலர் தினத்தை சிறப்பாக மாற்றும்.

எந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமென்பதை இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது அவசியம். அப்போதுதான் பயணம் எந்த தடங்கலும் இல்லாமல் சிறப்பாக முடியும்.

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT