Malda 
பயணம்

மாம்பழத்திற்குப் பெயர்ப்போன மால்டாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்!

பாரதி

மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள இந்த மால்டா, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடமாகும். அதேபோல் கலாச்சாரத்திற்குப் பெயர்ப்போன இந்த மால்டாவில் நீங்கள் மாம்பழத்தைச் சுவைக்காமல் மட்டும் திரும்பிவிடாதீர்கள். அந்தவகையில் மால்டாவின் நீங்கள் கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி பார்ப்போம்.

மால்டா அருங்காட்சியகம்:

மால்டா அருங்காட்சியகம்

வரலாற்றை அறிய விருப்பமுள்ளவர்கள் பந்த் சாலையில் அமைந்துள்ள இந்த மால்டா அருங்காட்சியத்திற்குக் கட்டாயம் செல்லுங்கள். இங்கு நீங்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கலைப் பொருட்களைப் பார்வையிடலாம். மேலும் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைக் கதைகளையும் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.

Gaur:

ஃபிரோஸ் மினாரில்

இங்கு நீங்கள் கௌர் பங்கா பல்கலைக்கழகம் மற்றும் ஃபிரோஸ் மினார் ஆகிய இடங்களைப் பார்க்கலாம். ஃபிரோஸ் மினாரில் 15ம் நூற்றாண்டின்போது சைபுதீன் ஃபிரோஸ் கட்டிய 26 மீட்டர் அளவுக் கொண்ட உயரக் கோபுரத்தை நீங்கள் பார்க்கலாம். இங்கிருந்து நீங்கள் நகரத்தின் பரந்த நிலத்தைக் காணலாம்.

அடினா மான் பூங்கா:

அடினா மான் பூங்கா

இந்தப் பூங்கா உள்ளூர் மக்களிடையே ஒரு பிரபலம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு வார இறுதியில் திட்டம் செய்து செல்லலாம்.

எக்லாகி கல்லறை:

Eklakhi

இந்தக் கல்லறையின் கட்டடக் கலை ஹிந்து மற்றும் இஸ்லாமியர்களின் கட்டடக் கலைகளின் கலவையாகும். இது 15ம் நூற்றாண்டில் ஆஃப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் ஷாவால் கட்டப்பட்டது.

சிக்கா மஸ்ஜித்:

Chika masjid

இடைக்கால கட்டடக்கலையின் மகத்துவத்தைக் காண்பிக்கும் இந்த சிக்கா மஸ்ஜித் அந்த இடத்தின் பழமையான கட்டடமாகக் கருதப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த மஸ்ஜித் நுட்பமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.

பாண்டுவா:

Pandua

இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய மசூதியான ஆதினா மசூதி இங்குத்தான் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் வரலாற்று இடிபாடுகளையும், நினைவுச்சின்னங்களையும் காணலாம்.

கவுர் தாம்:

கவுர் தாம்

இந்த இடத்தில், இந்துகளின் புனித யாத்திரை தளமாக கருதப்படும் ஜியோசோடா மாய் கோவில் உள்ளது. கோவில்களை விரும்புபவர்கள் கட்டாயம் இந்த இடத்திற்குச் செல்லலாம்.

ராம்சாகர் தேசிய பூங்கா:

raamsagar national park

பல வகையானப் பறவைகளைப் பார்ப்பதற்கும் படகு சவாரி செய்வதற்கும் ஒரு ஏற்ற பூங்கா இது. மால்டாவிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ராம்சாகர் நீர்த்தேக்கத்தின் அருகில் உள்ளது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT