விசா 
பயணம்

ஊர் சுற்றலாம் வாங்க.. வெளிநாடுகளுக்கு செல்ல தேவைப்படும் விசா.. அப்படினா என்ன தெரியுமா?

விஜி

பறவைகள் இயற்கையாகவே ஒரு சுகவாசி தான். ஏன் தெரியுமா நினைத்த இடங்களுக்கு வேண்டுமென்ற நேரத்தில் பறந்து செல்கிறது. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை. நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஆடை, பொருள் குறிப்பாக பணம் என இத்தனையும் தேவைப்படுகிறது.

இது இல்லாமல் நம்மால் எங்கேயும் செல்ல முடியாது. ஆனால் பலருக்கும் இந்த உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு ஓரமான தமிழ்நாட்டில் நாம் இருக்கிறோம். நிலாவுக்கு சென்று வரும் இந்த காலத்தில் கூட வீடுகளிலேயே நிறைய பேர் முடங்கிதான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக வெளியில் போக வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

அதுவும் சமீப காலத்தில், பல இளைஞர்கள் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி நீங்களும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டம் போட்டு இருக்கிறீர்களா. அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்.

வெளிநாடுகளுக்கு செல்ல உங்களுக்கு பாஸ்போர்ட், விசா கட்டாயம். பாஸ்போர்ட் எளிதில் ஒரு வாரத்திற்குள் உங்களால் பெற முடியும். அதற்கு ஆதார் அட்டை, பேன் அட்டை இருந்தால் போதுமானது.

ஆனால் விசாவுக்கு அப்படி இல்லை.. கிடைக்காமல் கூட போகலாம். விசாவா அப்படி என்றால் என்ன தெரியாதா..

விசா என்பதற்கான அர்த்தம் Visitors International Stay Admission (VISA) ஒரு நாட்டின் நுழைவு சான்று, அயல்நாட்டு சான்று, இசைவு என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நபர் தன் நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லவும், குறிப்பிட்ட நாட்கள் அந்த நாட்டில் தங்கவும் அனுமதி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படும் சான்றே விசா. இந்த விசா குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கும். அதற்குள் நாம் அப்டேட் செய்து விட்டு தொடரவேண்டும் என்றால் தொடரலாம். விசா காலக்கெடு முடிந்து விட்டால் அந்த நாட்டில் வசிக்க முடியாது. மீறி இருந்தால் நீங்கள் அதிகாரிகளால் கைது செய்யப்படுவீர்கள்.

விசாவில் 2 வகை உண்டு அது, வழமையான விசா - வழமையிலா விசா ஆகும்.

வழமையான விசா வகைகள்:

  • வர்த்தக விசா

  • நுழைவு விசா

  • சுற்றுலா விசா

  • மருத்துவ விசா

  • வாழ்க்கை துணை விசா

வழமையிலா விசா வகைகள்:

  • மாணவர் விசா

  • பணி விசா

  • தூதுவர் விசா அல்லது அலுவல் முறை விசா

வர்த்தக விசா:

கூட்டங்கள், மாநாடுகள், வர்த்தக கண்காட்சிகள் போன்ற வணிகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக செல்வதற்கும், வருவதற்கும் வணிக விசா அனுமதியளிக்கிறது.

நுழைவு விசா:

நுழைவு விசா இந்தியா வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டினரை இந்தியாவிற்கு வர அனுமதியளிக்கிறது.

மருத்துவ விசா:

இந்த விசா மூலம் நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். அல்லது வெளிநாட்டு மருத்துவர்களை அணுகலாம்.

சுற்றுலா விசா:

சுற்றுலா விசா என்பது சுற்றி பார்க்க செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசாவாகும். அது காலகெடுவை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

வாழ்க்கை துணை விசா:

நம் வாழ்க்கை துணை வெளிநாடுகளில் வேலை பார்த்தால் நாமும் அங்க செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் இந்த விசா மூலம் செல்ல முடியும்.

மாணவர் விசா:

வெளிநாடுகளில் தங்கி படிப்பதற்கு மாணவர் விசா வழங்கப்படுகிறது.

பணி விசா:

வெளிநாடுகளில் தங்கி வேலை பார்ப்பவர்கள் இந்த விசாவை பெற வேண்டும்.

தூதுவர் விசா அல்லது அலுவல் முறை விசா:

பணி சார்ந்து அதாவது வேலை தேடுவதற்காக செல்கிறீர்கள் என்றால் இந்த விசாவுக்கு அப்ளை பண்ண வேண்டும். ஆனால் அதற்கு நமக்கு தெரிந்த ஒருவர் அங்கு இருக்க வேண்டும். இந்த விசாவிற்கு மட்டும் அது கட்டாயம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT