தீபம்

கடனைப் போக்கும் அங்காரகன்!

தீபம்

“பெற்றிருந்த புகழ் போயிற்று. பெயர் போயிற்று. நாணயம் போய் தெருவுக்கு வந்து, நாலு பேருக்கு முன்னால் தலைகுனியும் நிலையும் வந்தாயிற்று” என யார் வேதனைப்படுவார்கள்? அன்று அமர்களத்தில் இராமன் “இன்றுபோய் நாளை வா” என்று இராவணனிடம் கூறிய சமயத்தில் இராவணனின் நிலை இப்படித்தான் இருந்தது. அஞ்சா நெஞ்சம் போயிற்று. வீரம் போயிற்று. சங்கரன் அளித்த வீர வாளும் போயிற்று.  பெற்றிருந்த வல்லமை அனைத்தும் போயிற்று. இந்த நிலையில் நிலத்தைப் பார்த்தே தலைகுனிந்து வருகிறான். அந்த மண் பெற்ற சீதை எள்ளி நகையாடுவாளே என்று நினைத்த மாத்திரத்தில் அவன் அடைந்த வேதனை ஆரம்பத்தில் கூறிய பாமரன் ஒருவன் பட்ட கடனை அடைக்க முடியாத நேரத்தில் எப்படி வேதனை அடைவானோ அந்த நிலையை ஒத்திருந்தது. அதனால்தான் கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று தொடர் ஏற்பட்டது. இந்த நாளில் கடன்காரன்தான் கடன் கொடுத்தவனைப் பார்த்து ‘இன்று போய் நாளை வா’ என்று கூறும் நிலை என்றாலும் வேதனை வேதனைதானே!

அத்தகைய கடன் தொல்லையிலிருந்து நீங்க அங்காரகனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். அவன் கடனுக்குக் காரகன். ஸ்கந்த புராணத்தில்
ஸ்ரீ சுக்கிராச்சாரியார் கடனை நீக்கும் 12 ஸ்லோகங்களை அங்காரகன் மேல் பாடியுள்ளார். அதில் இரண்டு ஸ்லோகங்கள் இந்த மாத மந்திரமாகக் கீழே தரப்பட்டுள்ளது.

மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:!

ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:!

அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல!

த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய!!

மங்களத்தைத் தருபவன். மண்ணின் மைந்தன். கடனைப் போக்குபவன். பொருளைத் தருபவன். நிரந்தரமான இருக்கையை உடையவன். ஆஜானுபாவன். சர்வ கர்மாக்களையும் தடுக்கக்கூடியவன். மகாபாக்கியஸாலியானவன். பக்தர்களுக்குப் பிரியமான பகவான். அப்படிப்பட்ட ஹே அங்காரகனே! தங்களை பணிகிறேன். என்னுடைய எல்லாக் கடன்களையும் உடனே போக்க வேண்டும் என்பது கருத்து.

எனவே, கடன்பட்டவர்கள் அது எந்த நிலையில் இருந்தாலும் செவ்வாய் கிரகமான அங்காரகனைப் பணிந்து வேண்டிக்கொண்டால் நிச்சயம் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவார்கள். குபேரனைப் போல் செல்வந்தர் ஆவர். தினமும் 11 முறை காலையில் பாராயணம் செய்யலாமே! இதைக் கூறுவதற்கு மாசு மருவற்ற மனம்தான் தேவை. காசு பணமல்ல. எனவே பக்தி சிரத்தையுடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்துதான் பாருங்களேன்.

ரொம்ப tired-ஆ இருக்கு...ஒரு நாள் லீவு கிடைக்குமா?

புதூர் மலைக் கிராமத்திலிருந்து புளிச்சாறு ஏற்றுமதி!

அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!

முதுகுத் தண்டுவட பிரச்னைகளைத் தீர்க்கும் பிரண்டை!

SCROLL FOR NEXT