Do you know the story of Lord Shiva giving Appar a view of Thirukailayam in Thiruvaiyaru? Image Credits: Maalaimalar
தீபம்

சிவபெருமான் அப்பருக்கு திருக்கைலாயக் காட்சி கொடுத்த கதை தெரியுமா?

நான்சி மலர்

டி அமாவாசை நாளன்று  அப்பருடைய பக்தியை மெச்சி சிவபெருமான் திருக்கைலாயக் காட்சியை திருவையாற்றில் கொடுத்தார். அதை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

அப்பர் என்ற திருநாவுக்கரசர் யாத்திரையாக பல சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிக்கிறார். ஒருமுறை திருக்காலத்தியப்பரை தரிசித்த அப்பருக்கு திருக்கைலாயம் சென்று சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. நடந்தே திருக்கைலாயம் போகிறார் அப்பர். அவருடைய தள்ளாத வயதிலும் இரவு, பகல் பாராமல் கைலாயத்தை நோக்கி நடக்கிறார்.

வெகுதூரம் நடந்து சென்றதால், அவரது பாதமெல்லாம் தேய்ந்துப் போகிறது. அதனால் ஊர்ந்து போகிறார். இதனால் கை, கால், முட்டி என்று எல்லாமே தேய்ந்து போகிறது. இப்போது மார்பால் ஊர்ந்து நகரத் தொடங்குகிறார். உடலெல்லாம் கிழிந்து ரத்தம் கொட்டுகிறது. இருப்பினும் நிறுத்தாமல் எப்படியாவது சிவபெருமானைப் பார்த்து விட வேண்டும் என்று உருண்டு, புரண்டு கைலாயத்தை நோக்கிச் செல்கிறார் அப்பர்.

இதை பார்த்த சிவபெருமான் முனிவர் ரூபத்தில் அப்பர் முன் வந்து மானிடர்களால் கைலாயக் காட்சியைக் காண முடியாது. அதனால் நீங்கள் வந்த வழியே திரும்பி சென்று விடுங்கள் என்று கூறுகிறார். ஆனால், அதற்கு அப்பர் என் உயிரே போனாலும் பரவாயில்லை. என் உயிரான சிவபெருமானை தரிசிக்காமல் போக மாட்டேன் என்று கூறுகிறார். அவர் பக்தியை பார்த்து வியந்த சிவபெருமான், ‘நீ வந்து என்ன என்னை தரிசனம் செய்வது? நானே வந்து உனக்கு தரிசனம் தருகிறேன்’ என்று முடிவு செய்கிறார்.

முனிவர் ரூபத்திலிருந்து சிவபெருமானாக மாறுகிறார். ‘ஓங்கும் நாவிற்கு அரசனே எழுந்து இங்கிருக்கும் பொய்கையில் மூழ்கி எழுந்திரு’ என்று கூறுகிறார். பொய்கையில் மூழ்கி அப்பர் எழுந்த இடம் திருவையாறு ஆகும். அங்கிருந்த அய்யாறு கோயிலை பார்க்கிறார். திருக்கைலாயக் காட்சியை சிவபெருமான் அப்பருக்கு காட்டுகிறார். பார்வதிதேவியுடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்ணாரக் கண்ட அப்பர் திருபதிகங்களை பாடினார். இது நடந்தது ஆடி அமாவாசை நாளன்றுதான். அப்பருடைய பக்தியால் திருக்கைலாயத்தையே திருவையாறுக்கு கொண்டு வந்த இந்த நிகழ்வைக் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது அல்லவா?

ப்ளீஸ் உப்பை குறைத்து சாப்பிடுங்களேன்…

ஒரு மொழி எப்படி அழிகிறது?

கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்த தந்தை… கிரிக்கெட் வீராங்கனைக்கு வந்த சிக்கல்!

இதோ ஈஸியான தீபாவளி பட்சண டிப்ஸ் உங்களுக்காக..!

ஓ! இதனால தான் கிரிக்கெட் வீரர்கள் சுவிங்கம் மெல்கிறார்களா? 

SCROLL FOR NEXT