Rameswaram temple 
தீபம்

பித்ரு தோஷப் பரிகாரத் தலங்கள் 7 எங்குள்ளது தெரியுமா?

எஸ்.மாரிமுத்து

ந்தியாவில் பித்ரு  தலமாக 7 முக்கியமான  தலங்களாக  குறிப்பிடப்படுகின்றன. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் 'தில ஹோமம்' செய்வது, தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும். அதற்குரிய பரிகார தலங்களை அறியலாம். இந்தியா முழுவதும் 12 ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன.

 ராமேஸ்வரம்.

இங்குள்ள ராமநாதர் கோவில் பித்ரு வழிபாட்டிற்கு உகந்தது. ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாகும். இதில் அக்கினி தீர்த்தம் ராமேஸ்வரம் கடலை குறிக்கும். இது பித்ரு தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்ட தீர்த்தமாக கருதப்படுகிறது.

தில தர்ப்பணப்புரி.

பூந்தோட்டம் என்ற ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் தில தர்ப்பணபுரி என்ற ஊர் உள்ளது. இங்கு முத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ராமபிரான் தனது தந்தை தசரதர் மற்றும் கழுகு பறவை ஜடாயு ஆகியோருக்கு தர்ப்பணம் கொடுத்ததாக்காக தலபுராணம் கூறுகிறது. இதன் காரணமாக இந்த ஊர் 'தில தர்ப்பணபுரி 'என்று ஆனது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமாக அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியில் செய்யப்படுகிறது.

பவானி கூடுதுறை.

இது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இங்கு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது இங்கு பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சிறப்புமிக்க தலங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் பவானி, காவேரி, அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் என் தென் 'திருவே ணி சங்கமம் 'என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை ஆகும்.

திருப்புவனம்.

வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சவுந்திர நாயகி உடனுறை புஷ்பனேஸ்வரர் கோவில் பிரசித்திப் பெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இக் கோயில் உள்ளது. இங்கு இறந்தவர்களின் அஸ்தியைக்  கரைத்தால் அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும்.

திருநாவாய்

கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் புகழ்பெற்ற வைணவ தலம் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மலப்புரம் மாவட்டம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள பெருமானுக்கு நாவாய் முகுந்தன் என்ற பெயர். இத்தலம் பித்ருக்கள் பூஜை செய்ய சிறந்த தலமாக உள்ளது துவாரபாலகர் யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு வந்து பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத் திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்து உள்ளார். அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர்.

ஆவூர்

தஞ்சை மாவட்டம் ஆவூர் பசுபதீஸ்ரர் கோயிலில் இருக்கும்  பஞ்ச பைரவ மூர்த்திகளை பஞ்ச பைரவ வழிபாடு செய்தால் பிதுர் தோஷம்

முன்னோர்களின் சாபம் நிவர்த்தியாகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் இங்கு இருக்கும் பைரவரை வழிபாடு செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்று நம்புகிறனர்.

திருமங்கலம்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ளது திருமங்கலம். இங்கு லோகராயகி அம்மன் உடனுறை அருள்மிகு சாமேவேதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு பாசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம் நீங்கவும், சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்கவும் இக்கோயிலில் பரிகாரம் பூஜை செய்து வழிபட்டுநிவர்த்தி பெற்றிருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT