Varahi Amman Image Credits: Boldsky Tamil
தீபம்

வாராகி அம்மன் வழிபாடு எப்படி செய்ய வேண்டும்...தெரிஞ்சிக்கலாம் வாங்க!

நான்சி மலர்

திரிகள் என்று சொன்னால் கண்ணுக்கு தெரிந்த எதிரிகளும் உண்டு, நம் கண்களுக்கு புலப்படாத எதிரிகளும் உண்டு. கண்ணுக்கு தெரியும்போது நாம் பார்த்து விலகி வந்து விடலாம். இதுவே கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடமிருந்து எப்படி தப்புவது? அத்தகைய எதிரிகளை அழிக்கக்கூடியவள்தான் வாராகி அம்மன்.

ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக விளங்கக்கூடியவள்தான் வாராகி அம்மன். இவர் சப்தமாதர்களில் ஒருவராக விளங்கக்கூடியவர். கிராமங்களில் இன்றும் சப்தமாதர்களின் வழிபாடு உண்டு. அதில் ஒருவராக இருப்பவர் வாராகி அம்மன். ராஜராஜசோழன் எதை ஆரம்பித்தாலும் இந்த அம்பிகையை வணங்கிவிட்டே செய்யும் பழக்கத்தை உடையவர்.

ராஜராஜசோழன் தான் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மனுக்கென்று தனி சன்னதியை அமைத்தார். இன்றைக்கும் வாராகிக்கு பெரிய தனி சன்னதி உள்ள இடம் தஞ்சை பெருவுடையார் கோவிலேயாகும்.

பிள்ளையார் சுழிப்போட்டே அனைத்து காரியத்தையும் துவங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் ராஜராஜசோழன் காலத்தில் வாராகியை கேட்டுக்கொண்டே அனைத்து காரியத்தையும் துவங்குவார்கள். ஏனெனில் வெற்றிக்கு உரிய தெய்வமாக வாராகியை கருதினார்கள்.

வாராகி காட்டுப்பன்றி முகத்தை உடையவள். காட்டுப்பன்றியின் குணம் பூமியில் தோண்டி எடுத்து அடியிலிருக்கும் கிழங்கை திங்கக்கூடிய தன்மையை கொண்டது. அதுபோல பிரச்னையின் அடிவரை சென்று அதை நீங்கக்கூடிய தன்மையை கொண்டவள் வாராகி அம்மனாவாள்.

காலை ஆறு மணியோ அல்லது மாலை விளக்கேற்றிய பிறகோ வாராகிக்கென்று ஒரு விளக்கை தனியாக வைத்து அதில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றி ஏற்றிவிட்டு கொஞ்சம் மல்லிகை பூ வைக்க வேண்டும். வாராகியின் மூலமந்திரத்தை விளக்கை பார்த்து ஜெபம் செய்ய வேண்டும்.

வாராகி அம்மனின் மூலமந்திரம்,

ஓம் கிலீம் வராஹமுகி ஹிரீம் ஸித்தி ஸ்வரூபிணி

ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா:

இந்த மந்திரத்தை சொல்லி வாராகியை பிராத்தனை செய்ய வேண்டும். நெய்வைத்தியமாக சர்க்கரைவள்ளி கிழங்கு, கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட வடை, பயறு வகையில் செய்யப்பட்ட சுண்டல் வகைகளை வைக்கலாம். கரும்பு, அன்னாசி, மாதுளை, தயிர்சாதம்.

வாராகி அம்மன்

அம்பாளுக்கு மிகவும் பிடித்த நிறம் நீலம், கருப்பு, சிவப்பு ஆகியவையாகும். செம்பருத்தி, நீலசங்கு பூ, செவ்வரளி ஆகிய பூக்களை படைக்கலாம். பஞ்சமி, பௌர்ணமி, அஷ்டமி, தசமி ஆகிய நாட்கள் வாராகிக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

துன்பங்கள், பிரச்னைகள் தேய்ந்து போக வேண்டும் என்று நினைப்பவர்கள் தேய்ப்பிறை பஞ்சமியிலிருந்து வழிபாட்டை ஆரம்பிப்பது விஷேசமாகும். இந்த வழிபாடு நமக்கு நீதியையும், நியாயத்தையும் வழங்கக்கூடிய வழிபாடாக அமையும். வாராகி அதர்வண வேத தலைவியாக வைத்து போற்றப்படும் அம்பிகையாவாள்.

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

SCROLL FOR NEXT