தீபம்

ஆடி அமாவாசை சிறப்பு: சதுரகிரியில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி!

கல்கி

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவில் நிர்வாகம் சார்பாகத் தெரிவித்ததாவது;

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை முன்னிட்டு மாதத்துக்கு 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் வந்து வழிபட அனுமதிக்கப் படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதால்,  இம்மாதம் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் பக்தர்கள் வந்து வழிபட அரசு அனுமதித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். 

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மேலும் சதுரகிரி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், மலையடிவார பாதை வழியாக மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் இரவு நேரங்களில் கோவிலிலும் வனப்பகுதியிலும் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT