முருகன் 
தீபம்

சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் வரும்! கந்த சஷ்டி!

கல்கி டெஸ்க்

இறைவனின் நற்கருணை இருந்தால் ஒருவருக்கு மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையும், குழந்தை பேறும் அமையும். முருகப் பெருமானை நினைத்து கந்த சஷ்டிவிரதம் இருந்தால் திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கைகூடும் என்பது நம்பிக்கை. முருகப் பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையானது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் கவலைகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று நம் வீட்டு பெரியவர்கள் பழமொழி கூறுவார்கள். முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதைத் தான் அப்படி கூறியிருக்கின்றனர். ஐப்பசி மாதம் வளர்பிறையில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும் திருமண பாக்கியம் கைகூடும், பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கந்தன் நம் கவலைகளை தீர்ப்பவன். கந்தனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகள் பறந்தோடும்.

கந்தன்

சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, பால்,பழம் நிவேதனம் செய்ய வேண்டும்.

இந்த சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப் பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின் குழந்தை வரம் கிடைக்கும். இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக நீங்கும்.

அலை அலை அலை அலையலை... 'துறைமுக அலை' என்பது என்ன?

தலைமுறை செல்வத்தை உருவாக்குவதற்கான 7 முக்கிய வழிமுறைகள்!

விண்வெளியில் புதிய மூலக்கூறைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! 

செவ்வாழைப் பணியாரம்: ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ரெசிபி! 

கனவில் இத்தனை வகையான கோட்பாடுகள் உள்ளனவா? வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்!

SCROLL FOR NEXT