Let's know about Varalakshmi Vrat completely! Image Credits: YouTube
தீபம்

வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்வோம்!

நான்சி மலர்

திருமணம் ஆன பெண்கள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து, பட்டுப்புடவை உடுத்தி, தங்கநகை அணிந்து மகாலக்ஷ்மியின் அம்சமான வரலக்ஷ்மிக்கு விரதமிருந்து பூஜை செய்வதே வரலக்ஷ்மி விரதமாகும். இந்த ஆண்டு வரலக்ஷ்மி விரதமானது ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்த பூஜையில் திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விரதமிருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தனக்கு நல்லப்படியாக திருமணம் நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த விரதம் இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் குழந்தைப்பேரு, ஆரோக்கியம், செல்வசெழிப்பு, நீண்ட ஆயுள் அனைத்தையும் இந்த விரதத்தின் மூலம் பெறலாம்.

செல்வத்திற்கு அதிபதியான மகாலஷ்மியின் ஒரு அம்சமே வரலக்ஷ்மியாகும். வரலக்ஷ்மி விரதத்தை மனிதர்களோ, தேவர்களோ, முனிவர்களோ நமக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. அந்த மகாலக்ஷ்மியே கற்றுக்கொடுத்த விரதமாகும். அப்படியென்றால், அந்த விரதத்திற்கு எவ்வளவு மகிமையிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஆடி அமாவாசைக்கு பிறகு பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில்தான் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமானின் உபதேசப்படி மகாலக்ஷ்மியை  வழிப்பட்டு விரதமிருந்தாள் உமாதேவி. மலைமகளாம் பார்வதிதேவி அலைமகளாம் திருமகளைப் போற்றி விரதமிருந்த நன்நாளே வரலக்ஷ்மி விரத நன்நாளாகும்.

ஒருமுறை பூவுலகில் சௌராஷ்டிர நாட்டு ராணி சுசந்திரா தன்னிடம் இருந்த செல்வ வளத்தாலும், ஆணவத்தாலும் மகாலக்ஷ்மியை அவமதித்தாள். இதனால் அவள் அனைத்து செல்வத்தையும் இழந்து வருந்தினாள். ராணி சுசந்திராவின் மகள் தான் சாருமதி. இவள் தெய்வ அனுகூலத்தால் வரலக்ஷ்மி விரதத்தை கேள்விப்பட்டு அதை அனுசரித்தாள்.

இதனால் மனம் மகிழ்ந்த மகாலஷ்மி சாருமதிக்கு அனைத்து செல்வங்களையும் வழங்கினார். தன் மகளிடமிருந்து சுசந்திராவும் வரலக்ஷ்மி விரதத்தை கடைப்பிடித்து இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று நலமாக வாழ்ந்தாள் என்பது வரலக்ஷ்மி விரதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையாகும்.

‘சித்திரநேமி’ வரலக்ஷ்மி விரதத்தை கடைப்பிடித்ததால் தான் குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றார். விக்ரமாதித்த மன்னன் இவ்விரதத்தை அனுஷ்டித்து நந்தனிடமிருந்து ராஜ்ஜியம்  பெற்றான். நந்தனின் மனைவி இவ்விரதம் இருந்ததால் பிள்ளை பேரு பெற்றார். இந்த விரதத்தில் நோன்புக் கயிறை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சித்து லக்ஷ்மியின் 108 போற்றியும் லக்ஷ்மியின் அஷ்டோத்திரமும் சொல்லி வழிபடலாம். அஷ்டலக்ஷ்மிகளின் அம்சமாக இருந்துக் கேட்கும் வரங்களை அருள்பவளே வரலக்ஷ்மியாகும்.

பட்டாசு வரலாற்று தகவல்கள்!

மாதந்தோறும் EMI தொகையை அதிகப்படுத்துவது நன்மை தருமா?

திருமண பந்தத்தின் உன்னதம் உணர்த்திய புகழ் பெற்ற சினிமா இயக்குநர் மனைவி!

2030ல் இந்தியாவே மாறப்போகுது… டேட்டா பயன்பாடு பன்மடங்கு உயரும்! 

ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான 5G உணவுகள்!

SCROLL FOR NEXT