தீபம்

மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழா!

எம்.கோதண்டபாணி

மாநகர் சென்னையை அடுத்துள்ள மாங்காடு திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில். எதிர் வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு காமாட்சி அம்மன், அருள்மிகு வைகுண்டப் பெருமாள் மற்றும் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்களில் நாளை 3.2.2023 வெள்ளிக்கிழமை முதல், 5.2.2023 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் தினமும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

அதன்படி, 3.2.2023 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அருள்மிகு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து 8.30 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் யானை வாகனத்தில் அமர்ந்து திருவீதியுலாவும் நடைபெறும்.

4.2.2023 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அருள்மிகு வைகுண்டப் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு
ஸ்ரீ காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து 8.30 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் கிளி வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறும்.

தைப்பூசத் திருநாளான 5.2.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்ன வாகனத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது நாட்களின் முறையே மாங்காடு இரா.பாலு குழுவினர், சித்துக்காடு டி.ஜி.முருகவேல் குழுவினர் மற்றும் மாம்பலம் எம்.கே.எஸ்.எஸ்.சந்தானம் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் தெப்பத் திருவிழாவில் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு வெள்ளீஸ்வரர், ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு வைகுண்டப்பெருமாளை தரிசித்து பேரருள் பெற்று நலமும் வளமும் பெறுவோம்.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT