தீபம்

ஆயுளைக் கூட்டும் சனிக்கிழமை விரதம்!

அமுதா அசோக்ராஜா

றைவனைக் குறித்து விரதம் இருப்பது என்பதே ஒருவரின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். மனிதன் ஒருவரின் முக்கியமானத் தேவைகள் மூன்று, ஒன்று செல்வம், மற்றது அதை அனுபவிக்கத் தேவையான ஆயுள், மற்றது ஆரோக்கியம். இந்த மூன்றும்தான் ஒரு மனிதனின் அவசியத் தேவைகள். இந்த மூன்றும் ஒருவருக்கு ஒருங்கே வாய்க்கப்பெற்றால் அவரே முழுமையான வாழ்க்கையை வாழத் தகுதியானவர் ஆகிறார். மேற்கூறிய அந்த மூன்று வரமும் ஒருவருக்கு வாய்க்க, அவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டாலே அவற்றை எளிதாகப் பெற்று விடலாம்.

பணம் எனப்படும் செல்வம் ஒரு மனிதனுக்கு முக்கியமான தேவையாகும். ஆனால், ‘பணம் மட்டும் ஒருவரிடம் இருந்துவிட்டால் போதுமா?’ என்றால் போதாதுதான். அதை அனுபவிக்க அவருக்கு ஆயுள் வேண்டுமல்லவா? நீடித்த ஆயுள் வேண்டுமென்றால் அதற்கு அவருக்கு ஆரோக்கியமான உடல் அவசியம் தேவைதானே. நவக்கிரகங்களில், சனி பகவானை ஆயுள்காரகன் என்பர். ஒருவரது ஜாதகத்தில் அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள் காலம் என்பது அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராகத் திகழ்பவர் பெருமாள். இவரே சனி பகவானுக்கு அதிபதி ஆவார். பெருமாளுக்கு மிக உகந்தது சனிக்கிழமை விரதங்கள். இந்த விரதத்தைக் கடைபிடிக்க ஒருவருக்கு முக்கியமான தேவையே பெருமாள் மீதான உண்மையான ஈடுபாடு மற்றும் பக்திதான்.

ஒருவர் தனது பாவங்கள் குறைந்து, நீண்ட ஆயுளோடு வாழ விரும்பினால் அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருப்பதே மிகச் சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது. இந்த சனிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பது என்பது மிகவும் எளிமையானது ஆகும். பகலில் பகவானின் சிந்தனையோடு இருந்து, பழம், தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு, இரவில் ஒரு வேளை எளிய உணவுடன் இந்த சனிக்கிழமை விரதத்தை முடிக்கலாம். இது தவிர, மாலை வேளைகளில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தரவல்லதாகும்.

இந்த சனிக்கிழமை விரதத்தை வருடத்தின் அனைத்து மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். சனிக்கிழமை விரதத்தைக் கடைப்பிடித்தால் பகவானின் அருளோடு, சகல செல்வத்தையும் பெற்று சுகமாக வாழலாம்.

இந்த 7 அறிகுறிகள் இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க பாஸ்! 

வெற்றி என்ற இலக்கை அடைய உதவும் 8 சக்சஸ் பாயிண்ட்டுகள்!

Ind Vs SA: விதிமுறையை மீறிய தென்னாப்பிரிக்கா வீரருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

இத தெரிஞ்சுக்காம சீம்பால் யாரும் சாப்பிடாதீங்க! 

சபரிமலை ஐயப்பன் கோயில் படி பூஜையின் சிறப்புகள்!

SCROLL FOR NEXT