தீபம்

மயிலையில் சப்த சிவ ஸ்தலங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

யிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலோடு சேர்த்து மல்லீஸ்வரர், விருபாட்சிஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என மொத்தம் ஏழு சிவாலயங்கள் உள்ளன. நிறைய பேர் மயிலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரர் கோவில் மட்டும் தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த கோவிலுக்கு மட்டும் சென்று திரும்புகிறார்கள். ஆனால் மற்ற ஆறு கோவில்களை பற்றியும் இப்போது தெரிந்து கொள்ளலாம். மயிலயே கயிலை கையிலையே மயிலை என கூறுவது உண்டு.

தீர்த்தபாலீஸ்வரர் :

யிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது. மாசி மாதத்தில் நடைபெறும் தீர்த்த நீராட்ட விழாவில் சப்த சிவாலய தெய்வங்களும் கடலில் இருந்து எழுந்தருள் வார்கள். அவர்களில் இந்த தல இறைவனுக்குத் தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். எனவே தான் இவருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என பெயர். இக்கோவிலில் அகத்திய முனிவரும், அத்ரி மகரிஷியும் வழிபாடு செய்திருக்கிறார்கள்.

மல்லீஸ்வரர்:

காரணீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் உள்ளது. முக்காலத்தில் இந்தப் பகுதியில் மல்லிகைச் செடிகள் நிறைந்திருந்ததாகவும் அதனால் இங்குள்ள ஈசனுக்கு மல்லீஸ்வரர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. மரகதவல்லி என்பது இறைவியின் திருப்பெயர். பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது .

வாலீஸ்வரர்:

வர் மயிலாப்பூரின் காவல் தெய்வமாக உள்ள கோலவிழி அம்மன் கோவிலுக்கு அருகில் தான் கோவில் கொண்டுள்ளார். கௌதம முனிவர் வழிபட்ட தலம் இது . 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம். நிலத்தின் அடியிலிருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆண்ட வாலி என்னும் வானர அரசன் வழிபட்ட தலம் இது.

விருபாட்சீஸ்வரர் :

விருபாட்சீஸ்வரர் ,விசாலாட்சி அம்பிகை. அம்மன் சன்னதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவன் காட்டி அருளியிருக்கிறார். இந்த கோவிலில் வழிபாடு செய்தால் ஆத்ம பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை .

காரணீஸ்வரர்:

சிஷ்ட முனிவர் வழிபட்ட தலம் இது. உலக இயக்கங்கள் அனைத்திற்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இறைவனுக்கு காரணீஸ்வரர் என பெயர் .சொர்ணாம்பிகை இறைவியின் திருநாமம் .12ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் இது. பிற்கால சோழர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளை செய்து இருப்பது கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இங்குள்ள இறைவனை வழிபட பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

வெள்ளீஸ்வரர் :

பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி மூன்றடி மண் கொடுக்க ஒத்துக் கொள்ள வந்திருப்பது மகாவிஷ்ணுவே என உணர்ந்த சுக்ராச்சாரியார் கமண்டல நீர் வரும் பாதையை வண்டாக உருவெடுத்து தடுக்க வாமனர் தர்ப்பைப் புல்லால் நீர் பாதையை குத்த சுக்ராச்சாரியாருக்கு பார்வை பறிபோனது . இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்கு சுக்ராச்சாரியார் வழிபட்ட தலம் இது . இத்தல இறைவனை வழிபட கண் நோய் நீங்கும்.

கபாலீஸ்வரர்:

வர் மயிலாப்பூரின் முக்கிய அடையாளமாகவும், சப்த சிவ ஸ்தலங்களில் ஏழாவதாகவும் தரிசிக்க வேண்டிய கோவில் இது. காசியப முனிவர் வழிபட்ட தலம் .திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பாடப் பெற்ற ஆலயமாகவும் உள்ளது.கற்பகாம்பிகை சமேத கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் தலம் இது. ஆதி காலத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கியதாகவும் 350 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய இடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

சக்தி வாய்ந்த இந்த சப்த ஸ்தலங்களையும் தரிசித்து வாழ்வில் மகிழ்ச்சியையும்,நிம்மதியையும் பெறுவோம்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT