நாம் கோவிலுக்கு சென்றவுடன் மணி அடித்து விட்டுதான் பிரார்த்தனை செய்ய ஆரம்பிப்போம். கோயில்களுக்கு அருகில் சென்றாலே அங்கு இருக்கும் மணி சத்தம் நம்மை இழுக்கும். கோயில்களிலும் வீடுகளிலும் பூஜையின்போது நாம் மணி அடிப்போம்.
ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் குறித்து காண்போம்.
நம் முன்னோர்கள் ஆன்மீக ரீதியாக எதை செய்தாலும் அதற்கு பின்னால் ஒரு அறிவியலை வைத்திருப்பார்கள். இதற்கு சிறந்த உதாரணம்தான் கோவிலில் நாம் அடிக்கும் மணி. ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி ஆனது சாதாரண உலோகத்தினால் செய்யப்படுவது அல்ல. தகர வகை உலோகமான கேட்மயம், ஜிங்க், ஈயம், தாமிரம், நிக்கல், குரோமியம், மாங்கனீசு போன்ற பல உலோகத்தின் கலவையால் செய்யப்படுகிறது. இதை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகத்தின் விகிதத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது.
கோவில்களில் இருந்து ஒவ்வொருமுறை மணி அடிக்கும் போதும் ஒவ்வொரு உலோகத்தில் இருந்த தனித்துவ ஒலிகளானது ஒன்று சேர்ந்து வெளியாகும். இந்த தனித்துவமான ஒலிகளால் நமது இடது மற்றும் வலது மூளையில் ஒற்றுமை உண்டாக்குமாம். ஆலய மணியின் சத்தம் வெளியே வந்த உடனேயே 7 நொடிகள் வரை அதன் ரீங்காரம் நீடிக்கும். இது மனித உடலில் உள்ள ஏழு சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அநாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றை தூண்டுகிறது.
மணியின் ஓசையில் இருந்து வரும் எதிரொலி நமது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களையும் தொட்டு எழுப்புகிறது. அதனால் மூளையில் வாங்கும் தன்மையையும் உணர்வு திறனும் தீவிரமடையும். அதனால்தான் நம் கருவறைக்கு செல்லும் முன் மணி அடித்துவிட்டு செல்கிறோம். கோயில்களில் பூஜை மந்திரத்தின் ஒலியும் இந்த ஆலயமணியின் ஒலியும் நம் உடலுக்குள் செல்லும்போது நம் மனமும் உடலும் விழிப்படையும். இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இப்படி கோவிலில் அடிக்கப்படும் ஆலயமணிக்கு பின்னால் நம் முன்னோர்கள் அர்த்தத்துடன்தான் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த சான்றாக இருக்கிறது.
இனிமேல் கோயில் செல்லும்போது ஆலயமணியை அடித்துவிட்டு ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த ஒலியை உணருங்கள். உங்கள் உடலினுள் உண்டாகும் அற்புதமான மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். இதேபோல் வீட்டிலும் பூஜை வழிபாட்டின்போது மணி அடிக்கும்போது அந்த சத்தம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை வெளியேற்றி நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மணி அடிக்கும்போது மேற்கண்ட பதிவில் படித்த அத்தனை விஷயங்களை மனதில் நிறுத்தி வழிபடுங்கள்.