பரஞ்சோதீஸ்வரர் 
தீபம்

சருமநோய் தீர்க்கும் தஞ்சாக்கூர் பரஞ்சோதீஸ்வரர்!

பொ.பாலாஜிகணேஷ்

துரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் திருப்பாச்சேத்தியில் இறங்கி அங்கிருந்து தெற்கே 5 கி.மீ., தொலைவில் தஞ்சாக்கூர் உள்ளது. சிறிய கோயில்.  இறைவன்  பரஞ்சோதீஸ்வரர், இறைவி  ஞானாம்பிகை. 

ஒரு முறை கைலாயத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் சிவனிடம் சென்று,""இறைவா! நாள் தோறும் நாங்கள் தங்களை பூசித்து வருகிறோம். இருந்தாலும் தங்களது எதார்த்த வடிவமாகிய பரஞ்சோதி தரிசனத்தை எங்களுக்கு காட்டியருள வேண்டும்,''என வேண்டினர். அதற்கு இறைவன்,"பூமியில் வில்வ வனத்தில் நான் அரூபமாக உள்ளேன். நீங்கள் அங்கு சென்று பூசித்தால் பரஞ்சோதி தரிசனம் கிடைக்கும்,'' என்றார். 

அதன்படி அவர்கள் வில்வ வனத்தை கண்டுபிடித்து, அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்ய குளமும் உண்டாக்கி சிவ பூஜை செய்தனர்.

சுயம்பு மூர்த்தியாக

சிவன் இவர்களது பூஜையை சோதனை செய்ய விரும்பி முதலில் ஒரு தேவ கன்னியையும், அதன் பின் மகாகாளி, வீரகாளியையும், கடைசியாக தானே வயதானவர் வேடத்தில் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தார். இதையெல்லாம் தேவர்கள் கண்டு கொள்ளாமல் பூஜையை தொடர்ந்தனர்.

இவர்களது மனஉறுதியை மெச்சிய இறைவன் ஆவணி மாத சோமவாரத்தில் இத்தலத்தில் தேவர்கள் விரும்பிய பரஞ்சோதி தரிசனத்தை காட்டினார். இதன் பின் இந்த தரிசனம் காண பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலம் ஆதிவில்வவன ஷேத்திரம் எனப்படுகிறது. விநாயகர், தண்டபாணி, பலிபீடம், நந்தி முதலிய திருமேனிகள் உள்ளன. பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே மூலவர் தரிசனம். லட்சுமி, சரஸ்வதி, கௌதமர், அகத்தியர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வழிபட்ட தலம். 

மண்டபத்தின் முன்னால் கொடிமரமும் நந்தியும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். 

இக்கோயிலை சிவகுமார மௌன சுவாமி என்ற துறவி 1958 ல் திருப்பணி செய்துள்ளார். 1961-ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக அங்குள்ள பெயர்ப் பலகைக் குறிப்பு தெரிவிக்கின்றது. 

‘தஞ்சைவாணன் கோவை’ பாடிய பொய்யாமொழிப் புலவர் பிறந்த பதி. இத்தலம் சுந்தர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு வைப்புத் தலமாகும்.

புலமையில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

சருமம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

இந்திராணி, ராமர், லட்சுமணர், அனுமார், அகத்தியர், கவுதம முனிவர் ஆகியோரும், பிற்காலத்தில் மாறன், மறைவாணன், தஞ்சைவாணர் போன்ற அரசர்களும் தரிசனம் செய்துள்ளனர். 

எங்கே இருக்கு… சிவகங்கையில் இருந்து பேருந்து வசதி உள்ளது தஞ்சாக்கூருக்கு செல்ல.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT