வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.
இதுகுறித்து இக்கோவில் நிர்வாகம் தெரிவித்ததாவது;
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயில் உலகின் மிக உயர்ந்த கோவில் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இக்கோவிலில் 146 அடி உயரமுள்ள முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை மலேசியாவில் உள்ள ஸ்ரீ பத்துமலை முருகன் கோவிலில் உள்ள 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலைதான் உலகின் உயர்ந்த சிலையாக காணப்பட்டது.
இந்நிலையில் சேலம் ஸ்ரீ முத்து மலை முருகன் கோவில் அந்த அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த கோவிலை மலேசியா ஶ்ரீ பத்துமலைக் கோவிலைக் கட்டிய திருவாரூர் தியாகராஜன் தலைமையில் வடிவமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அண்டை மாநிலங்கள், மற்றும் பல ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் ஆலோசனையில் வாழப்பாடி டி எஸ் பி முத்துசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.