2023 Cricket world cup 
கோகுலம் / Gokulam

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள்! அரையிறுதிப் போட்டியில் ஷமி - கோலியின் அபார சாதனைகள்!

மஞ்சுளா சுவாமிநாதன்

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023இல் நமக்கு நன்கு பரிச்சயப்பட்ட, நம்மால் மறக்க முடியாத,  ஒரு வார்த்தை ரோ - கோ  (ரோஹித் சர்மா - விராட் கோலி). ஆனால், நேற்று , நவம்பர் 15 அன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமி மற்றும் விராட் கோலியின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்தவர்கள்  இந்த இருவர்கள் சாதனையை மறக்கவே முடியாது. அந்த இருவரும் நேற்று முறியடித்த சாதனைகளைப் போற்ற இந்த ஒரு கட்டுரை போதாது.

முதலில் டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணி 397 ரன்கள் நான்கு விக்கெட் இழப்புக்கு குவித்தனர். அனைத்து பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக விளையாட , கோலியும் , ஷ்ரேயஸ்ஸும் சதம் அடித்து பட்டயைக் கிளப்பினர். ஆனால் நேற்று நடந்த போட்டியில் ரசிகர்களால் மறக்க முடியாத சாதனை என்றால் அது முகமது ஷமியின் ஏழு விக்கெட்  குவிப்பு மற்றும் விராட் கோலியின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 50வது சதம்.

முகமது ஷமியின் சாதனைகள்

●    மும்பையில் புதன்கிழமை நடந்த அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து முகமது ஷமி 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆனார். உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7/57 எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.

mohammed shami

●    டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன், டாம் லாதம், லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சவுத்தி ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார், இதனால் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

●    ஷமியின் 7/57 vs நியூசிலாந்து என்ற விக்கெட் எண்ணிக்கை அவரை சர்வதேச அளவில் 14வது இடத்திற்கு எடுத்துச் சென்றது.

●    முகமது ஷமி ஒரு உலகக் கோப்பை பதிப்பில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

●    இப்போட்டியில் ஷமி 6 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா ஒன்பது போட்டிகளில் 22 விக்கெட்டுகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், இலங்கையின் தில்ஷன் மதுஷங்கா 9 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

●    ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் (2011 ஆம் ஆண்டு) அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ஜாகீர் கானின் 21 விக்கெட்டுகள் சாதனையை முகமது ஷமி முறியடித்தார்.

விராட் கோலியின் சாதனைகள்

●    இந்தியாவின் விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை 2023 அரையிறுதியின் போது 50 ஒரு நாள் சர்வதேச சதங்களை அடித்த முதல் பேட்டர் ஆனார். இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சினின் 49 சதங்களை கோலி சமன் செய்திருந்தார்.

●    கோலி ஒரு நாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த டெண்டுல்கரின் சாதனையையும் நேற்று முறியடித்தார். அவர் சச்சினின் 673 ரன்களை கடந்து, உலகக் கோப்பை 2023 பதிப்பில் 711 ரன்கள் எடுத்துள்ளார்.

virat kohli
●    உலகக் கோப்பை போட்டிகளில்  அதிக ரன்கள் குவித்த மற்ற வீரர்கள்

விராட் கோலி (IND) - 711* (2023)

சச்சின் டெண்டுல்கர் (IND) - 673 (2003)

மேத்யூ ஹெய்டன் (AUS) - 659 (2007)

ரோஹித் சர்மா (IND) - 648 (2019)

டேவிட் வார்னர் (AUS) - 647 (2019)

●    இது நடப்பு உலகக் கோப்பையில் கோலியின் எட்டாவது 50+ ஆட்டம் ஆகும். இதற்கு முன்பு சச்சின் (2003) மற்றும் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (2019) இணைந்து வைத்திருந்த ஏழு 50+ ரன் குவிப்பின் சாதனையை அவர் நேற்று கடந்தார்.

●    நேற்றைய ஆட்டத்தின் போது கோலி ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஒரு நாள் போட்டிகளில் எடுத்திருந்த மொத்த ரன்களை கடந்தார். கோலி 279 இன்னிங்சில் 13705 ரன்கள் எடுத்து, ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

●    ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் பட்டியல்

சச்சின் டெண்டுல்கர் - 452 இன்னிங்ஸ்களில் 18426 ரன்கள்

குமார சங்ககாரா - 380 இன்னிங்ஸ்களில் 14234 ரன்கள்

விராட் கோலி - 279 இன்னிங்ஸ்களில் 13705* ரன்கள்

ரிக்கி பாண்டிங் - 365 இன்னிங்ஸ்களில் 13704 ரன்கள்

சனத் ஜெயசூர்யா - 433 இன்னிங்ஸ்களில் 13430 ரன்கள்

எந்தவொரு ஆட்டத்திலும் சாதனைகள் முறியடிக்கப் படுவது இயல்பே. ஆனால் 2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், நேற்று இந்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களும் முறியடித்த சாதனைகள் எந்த வகையிலும் எளிதாக எடை போட்டு விட முடியாது. ஷமி மற்றும் கோலி நேற்று செய்த சாதனைகளை, கடந்த மைல் கற்களை மற்ற கிரிக்கெட் வீரர்கள் முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT