Adhar card... 
கோகுலம் / Gokulam

ஆதார்...! இது வந்த கதை தெரியுமா..?

கோவீ.ராஜேந்திரன்

தார் தனி ஒரு இந்தியரின் அடையாள அட்டை எண் என்பதும் அதுவே மத்திய மாநில அரசுகளின் பல சலுகைகளையும், சேவைகளையும் பெற உதவும் 12 ­­இலக்க எண் என்பதும் பலருக்கு தெரிந்து இருக்கும். ஆனால் இது நம் நாட்டில் எப்படி அறிமுகமானது என்பது தெரியுமா?

ஆதார் எண் என்பது 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும், இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டை. இந்திய அரசு வழங்கும் பல சேவைகளுக்கு ஆதார் அவசியம் என்கிறது அரசு. காரணம் ஆதார்தான் ஒருவரின் அடையாளம், அதில் தனி ஒருவரின் வயது, அங்க அடையாளங்கள், முகவரி, புகைப்படம் என அனைத்தையும் கொண்டது என்பதுதான்.

1803 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில்தான். உலகில் முதல் முறையாக பொது மக்களின் நலனுக்காக அவர்களுக்கு அடையாள எண் வழங்கும் முறை அறிமுகமானது. நெப்போலிய மன்னர் ஆட்சி காலத்தில் வேலை செய்யும் மக்களிடையே சம்பள பிரச்சினை எழாமல் இருப்பதற்காக அடையாள எண் அறிமுகமானது.

1839 ம் ஆண்டு துருக்கியை ஆண்ட பேரரசர் இரண்டாம் சுல்தான் முகமது. தன் நாட்டின் மக்களிடையே நன்மதிப்பை அதிகரிக்க, நாட்டு மக்களின் விபரக் குறிப்புகள் அடங்கிய அடையாள எண் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

1938 ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தன் நாட்டு மக்கள் அனைவரும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று ஒரு புதிய விதியை அமல்படுத்தியது. இங்கிலாந்தும், ஜெர்மனியும். அதன் பிறகு 1940 ல் பிரான்ஸ் அரசும் இதை அமல்படுத்தியது. இரண்டாம் உலகப்போருக்கு பின் 1949 ம் ஆண்டு ஹாங்காங் மற்றும் தைவான் நாட்டினர் சீனாவிலிருந்து வந்தவர்கள் என தெரிவதற்காக அடையாள அட்டை வழங்கியது.

1958 ல் சீன அரசு அந்நாட்டின் குறிப்பிட்ட பிரிவினர் பயனை அடைய அடையாள அட்டைகளை அறிமுகப் படுத்தியது, அதேபோல் 1960 தென் கொரியாவும் அடையாள எண்களை தங்களது நாட்டில் அறிமுகப் படுத்தியது.

இந்தியாவில் 2006 ம் ஆண்டு தகவல் தொடர்பு அமைச்சகம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக ஒரு அடையாள அட்டை வழங்க முடிவு செய்து. 2007 ம் ஆண்டு EGOM அமைப்பு ஒப்புதலுடன் தகவல் டேட்டாகளை சேகரித்து அதை ஓர் எண்ணுடன் வழங்க முக்கிய வழி வகுத்தது.

UIDA (யுனிக் ஜடென்டிபிக்கேசன் அதாரிட்டி ஆப் இந்தியா) எனும் அமைப்பு நந்தன் நில்கரி என்பவரை சேர்மனாக நியமித்து ஆதார் எண்ணை அனைத்து மக்களுக்கும் வழங்க முடிவு செய்தது. இதற்கு முன்னோடி ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.என் என்ற சமூக பாதுகாப்பு எண் வழங்கும் திட்டம்தான். அதன் படி முதல் ஆதார் எண் அட்டை 2010 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் நெப்போலி எனும் ஒதுக்குப்புறமான கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா  சோனாவாளே எனும் 45 கூலித்தொழிலாளி பெண்ணிற்கு வழங்கப்பட்டது. இதை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பொது கூட்டத்தில் வழங்கினார்.

2010 டிசம்பரில் NIA (நேஷனல் ஐடென்டிபிகேசன் ஆப் இந்தியா) பார்லிமெண்ட்டில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என சட்ட வரைவை அமல்படுத்தியது. ஆனால் 2012 ல் கர்நாடக மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கே. எஸ். பட்டுசாமி ஆதார் அவசியம் அல்ல என்பதை வலியுறுத்தி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான தீர்வாக சுப்ரீம் கோர்ட் ஆதார் எண் அனைத்து உரிமைகளுக்கும் அவசியமல்ல,  ஆனால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை பெற அவசியம் என வலியுறுத்தியது.

­­­உலகின் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதியின் 20தாவது பதிப்பில் 2020 ம் ஆண்டு ஜனவரியில் வெளிவந்த பதிப்பில் இந்திய மக்களின் தனித்துவ அடையாளமான ஆதார் எனும் வார்த்தை இடம்பெற்றது.

ஆதார் அட்டையின் முக்கியத்துவம் கருதி அதை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆப்டேட் செய்ய அரசு அறிவுறுத்துகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT