போகிப் பண்டிகை 
கோகுலம் / Gokulam

பழையன கழிதல் – புதியன புகுதல் - பொருள் என்ன தெரியுமா?

கல்கி டெஸ்க்

-நித்தீஷ்குமார் யாழி

 

போகிப் பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும்தான். அதாவது பழையனவற்றை வெளியேற்றி, புதியவற்றை ஏற்கக்கூடிய நாளாக கருதப்படுகின்றது.

பழையன கழிதல்

ம் வீட்டில் பழைய அல்லது பயன்பாட்டில் அல்லாத பொருட்களை  வைத்திருப்பது பயன் அற்றது. பயன் அற்ற பொருட்கள் அதிகம் வீட்டில் சேர்வதால் வீட்டின் அதிக இடங்களை அவை அடைத்துக்கொள்ளும். அப்படிப்பட்டப் பொருட்களை யாருக்காவது பயன்படுமானால் அவர்களிடம் கொடுத்துவிடுவது நல்லது. போகி அன்று பலர் பழையனவற்றை எரிப்பது நல்லது என்று எரித்துவிடுவார்கள். ஆனால், ஒரு பொருளை எரிப்பதைவிட உபயோகப்படுவோருக்குக் கொடுப்பது நல்லது.

புதியன புகுதல்

புதியன புகுதல் என்றால் நாம் வெளியேற்றிய பழைய பொருட்களுக்குப் பதிலாக புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பது கிடையாது. வீட்டில் இருக்கும் பொருட்களை புதியதுபோல தூய்மை செய்துவைப்பதுதான் புதியது புகுதல் ஆகும். இப்படி தூய்மை செய்யும் பணியை நாம் அன்றாடம் செய்யாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்ற பழக்கத்தை நினைவூட்டுவதே போகி பண்டிகை.

போகியும் புதிதாய் நாமும்

போகி என்பது ‘மார்கழி' முடிவிலும் ‘தை' மாதம் தொடக்கத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று, இதற்கு முன் நம்முடைய மனதில் இருந்த கவலைகள் எல்லாவற்றையும் மறந்து, சிந்தனையில் புத்துயிர் பெற்று “இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையுடன் புதிய உத்வேகத்துடன் புதிய ஆற்றலுடன் உறுதியான மன வலிமையுடன் செயல்பட வேண்டும்.

பண்பாடும் கலாசாரமும்

ம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த கலாசாரம் பற்றிய சரியான தகவல்கள் தெரியாமல் நாம் பல விழாக்களை மறந்துவிட்டோம். தமிழர்களுக்கே உரித்தான உழவுத்திருநாளை போற்றும்விதமாக, போகியை அடுத்து, இவ்வுலகை இயக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப்பொங்கல் திருநாளும், உழவுக்கு பெரும் உதவி புரியும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப்பொங்கலும், உறவினர்களை சந்தித்து, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் விதமாக காணும்பொங்கலும் கொண்டாடி வருகிறோம்.

குழந்தைகளே... கோகுலம் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்!

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT