Coco game... Image credit - periyarpinju.com
கோகுலம் / Gokulam

மகாபாரத காலத்தில் தொடங்கியதா கோகோ விளையாட்டு?

கலைமதி சிவகுரு

த்தனையோ கூடி விளையாடும் குழு ஆட்டங்கள் இந்தியாவில் தோன்றி இருந்தாலும், பாரம்பரிய விளையாட்டுகளாகிய, கபடியும், கோகோவும் தான் இந்திய விளையாட்டுத் துறையின் இரு கண்களாக விளங்குகின்றன. இரு ஆட்டங்களும், இந்தியாவின் பழங்கால பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பனவாக விளங்குகின்றன- தோன்றியதும் தொடக்கம் பெற்றதும் இந்தியாதான்!

விளையாட்டின் நோக்கம்

கோகோ விளையாட்டில் இரண்டு அணிகள் உண்டு. ஒவ்வொரு அணியிலும் 9 வீரர்கள். ஒரு அணியின் 9 பேர்களையும் தொட்டு புறந்தள்ளுவதே எதிரணி ஆட்டகாரரின் நோக்கம். எதிரணி ஆட்டகாரர்கள் தொட்டு விடாமல் தப்பித்து ஓடுவது ஆட்டகாரரின் நோக்கம் ஆகும். 

விளையாடும் முறை

களத்தில் ஓர் அணியின்  வீரர்கள், ஒரு வரிசையில் ஒருவர் ஒரு திசையை நோக்கியவாறும் அடுத்தவர் எதிர் திசையை நோக்கியவாறும் அமர்ந்து இருப்பர். எதிரணி இரண்டு அல்லது மூன்று வீரர்களை  களத்தில் இறக்குவர். 

அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரை துரத்தி தொட்டு வெளியேற்றுவது ஆகும். ஆனால் அவர்கள் ஒரே திசையில்தான் ஓட வேண்டும். அமர்ந்திருப்பவர்களுக்கு இடையே குறுக்கே புக முடியாது. மாற்றாக ஓடும் எதிரணியினர் அவ்வாறு குறுக்கே செல்லலாம். துரத்துபவர்கள் வரிசையின்  கடைசி வரை ஓடி அதன் பின்னரே மற்ற திசையில் ஓட முடியும். துரத்துபவர் தனக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருக்கும் நபரிடம் மாற்றி விடலாம். அப்போது "கோ” என ஒலி எழுப்புவர். இது துரத்துபவர் மாறுவதை குறிக்கும். 

எந்த அணி குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். 

கோகோ ஆட்டம் பற்றிய குறிப்பும், சிறப்பும்

4 வயதுக்கு மேல் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளலாம். விளையாட  தேவையான நேரம் 5 அல்லது 7 நிமிடங்கள். மிக குறைந்த கால அளவில் ஆடி முடிக்க வேண்டும் என்ற நிலையும், எளிமை, வலிமை இவையே ஆட்டங்களின் ஜீவனாகவும் விளங்கி வருகின்றன. 

எளிமை, அடக்கம், பணிவு என்னும் மூன்று பண்புகளும் இந்திய நாட்டு கலாசாரத்தின் மூலங்களாகும். எளிமையான வாழ்வு, உயர்ந்த லட்சியம் இதுவே இந்திய பண்பாட்டின் எழில் விளக்கமாகும். கோகோவும், கபடியும் இதனை பிரதிபலித்து பெரிதுபடுத்தி காட்டுகின்றன. இவ்வளவு அருமையான ஆட்டம் எப்பொழுது தோன்றியது என்று ஆராய விரும்பினால் அது வரலாற்றக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. 

கோகோ விளையாட்டு இப்படித்தான் தோன்றியிருக்குமோ?

மகாபாரதத்தில் துரியோதனனுக்கும் பஞ்சபாண்டவர்களுக்கும், இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த யுத்தத்தில் அந்த போர் களங்களிலே நால்வகை சேனைகள் அணிவகுத்து நின்று போரிடும். அவை வியூகம் அமைத்து நிற்கையிலே உள்ளே நுழைந்து, போரிட்டு வெற்றி பெற்று மீண்டு வரும் வீர தீரச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். 

அவ்வாறு சேனைகளை நிறுத்தி வைத்திருக்கும் முறைகளில் ஒரு வகைக்கு ரதோடா என்பது பெயராகும். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சேனைகளுக்கிடையே குதிரைகள் பூட்டிய சரட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வீரர்கள் புகுந்து போரிடும் முறையில் அந்த சரட்டு வண்டியானது எவ்வாறு சேனைகளுக்கிடையே செல்லும் என்றால் தற்போது கட்டங்களில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இடையே  ஓட்டகாரர் ஓடி செல்கின்றாரே, அது போல் அமைந்திருந்தது. அவ்வாறு ஓடிய பழக்கமே கோகோ ஆட்டம் தோன்றிட வழி வகுத்திருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கோகோ விளையாட்டில் மெதுவாக நடப்பதோ, ஓடுவதோ, மெதுவாக விரட்டுவதோ கூடாது. விரைவான ஓட்டம், விரைவான சிந்தனை, விரைவான செய்கை, அனைத்தும் தேவை என்பதை அறிந்திருக்க வேண்டும்.

விலங்கு ராஜ்ஜியத்தின் கோமாளிகள் யார் தெரியுமா?

நம் வாழ்வில் தவறான நபர்களிடமிருந்து தள்ளியிருப்பதே சிறந்தது!

Aristotle Quotes: அரிஸ்டாட்டில் சொன்ன 15 பொன்மொழிகள்!

அன்பு இல்லாத செயல் அர்த்தமற்றது!

News 5 – (21.09.2024) ‘வலிமையான அரசியல் பாதை’ விஜய் அறிக்கை!

SCROLL FOR NEXT